Published : 25 May 2022 09:11 PM
Last Updated : 25 May 2022 09:11 PM
எண்ணம் போல் வாழ்வு என்பது மூத்தோர் வாழ்த்து. நமது எண்ணம்தான் நம்மை உருவாக்கி வழிநடத்துகிறது என்பதே இதன் மறைபொருள். நமது வாழ்க்கை, உடலுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை இன்றைய அறிவியல் ஆதாரபூர்வமாக நிரூபித்து வருகிறது. நமது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் மனதிற்கும் தொடர்பு இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நிக்கோல் 'தி கான்வர்சேஷன்' தளத்தில் நடால் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது...
நமது உடலுக்கும் மனதிற்கும் (மூளை) நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஏதாவது ஒரு பீதியால் இதயம் வேகமாக துடிப்பதை, பதற்றப்படும்போது உள்ளங்கை வேர்ப்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது உங்களுக்குப் புரியும். அதேபோல் கவலை, கோபம், பயம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளும் பல்வேறு வழிகளில் உடல் மொழியாக வெளிப்படுத்தப்படுகிறது. அவை வலி, சோர்வு, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், செரிமானத்தில் பிரச்சினை போன்ற உடல் உபாதைகளில் மூலமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT