Published : 08 Feb 2020 11:16 AM
Last Updated : 08 Feb 2020 11:16 AM
திருமணச் சடங்குக்காக மணமகள் அணிந்திருந்த சேலை தரமற்றதாக இருப்பதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்யவே மணமகன் ஓட்டமெடுத்தார். அற்ப காரணத்துக்காக திருமணம் நின்றுபோன சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
திருமணம் நின்றுபோக பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் சிறு விஷயங்களுக்காகக்கூட திருமணம் நின்று போன கதைகள் உண்டு.
ஆனால், கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் பிதாரக்கரே என்ற கிராமத்தில் சொற்ப காரணத்துக்காக திருமணம் நிறுத்தப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஹசனைச் சேர்ந்த ரகுகுமாரும் சங்கீதாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் ஏற்பாடானது. இந்நிலையில், திருமணச் சடங்கின்போது மணப்பெண் அணிந்திருந்த புடவை தரமற்றதாக இருப்பதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டார் அதனை மாற்றச் சொல்லியுள்ளனர். இதில் இருவீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மணமகன் திருமண மண்டபத்திலிருந்து மாயமானார்.
இது தொடர்பாக ஹசன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெண் வீட்டாரை அதிர வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT