Published : 11 Oct 2025 12:56 AM
Last Updated : 11 Oct 2025 12:56 AM

பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை 

சோஹோ நிறுவனத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலைக்கு சேர்ந்த அப்துல் அலிம்.

புதுடெல்லி: சோஹோ நிறு​வனத்​தில் சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக பணி​யாற்​று​பவர் அப்​துல் அலிம். இதே நிறு​வனத்​தில் பாது​காவலர் (செக்​யூரிட்டி கார்​டு) பணி​யில் 2013-ல் சேர்ந்​தவர் தற்​போது சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக மாறி அனை​வருக்​கும் முன்​மா​திரி​யாக மாறி​யுள்​ளார்.

இத்​தனைக்​கும் இவர் 12-ம் வகுப்பு வரை மட்​டுமே படித்​துள்​ளார். பட்​டப்​படிப்பு எது​வும் படிக்​காத நிலை​யில், மிகப்​பெரிய சாப்ட்​வேர் நிறு​வனத்​தில் தன்னை இணைத்​துக் கொண்டு அனை​வரும் போற்​றும்​படி​யாக பணி​யாற்றி வரு​கிறார்.

இதுதொடர்​பாக சமூக வலை​தளப் பக்​கத்​தில் அப்​துல் அலிம் கூறி​யுள்​ள​தாவது: 2013-ம் ஆண்டு நான் சென்னை வந்தேன். 2 மாதங்​கள் சுற்​றித்​திரிந்து வேலை தேடினேன். பல நாட்​கள் தெரு​வோரத்​தில் படுத்து தூங்​கினேன். 2 மாதம் கழித்து ராமாபுரத்​தி​லுள்ள சோஹோ நிறு​வனத்​தில் செக்​யூரிட்டி கார்டு வேலை கிடைத்​தது.

அதன் பின்​னர் நிறு​வனத்​தில் வேலை பார்க்​கும் ஒரு மூத்த ஊழியருடன் பழக்​கம் ஏற்​பட்​டது. அவரிடம் எனக்கு எச்​டிஎம்​எல் கோடிங் தெரி​யும் என்று கூறினேன். அதே​நேரத்​தில் நான் எந்​த​வித பட்​டப்​படிப்​பும் தேர்ச்சி பெற​வில்லை என்​ப​தை​யும் தெரி​வித்​து​விட்​டேன்.

பின்​னர் அவரின் அனு​ம​தி​யுடன் சோஹோ நிறு​வனத்​துக்கு சென்று சாப்ட்​வேர் கற்​றுக்​கொண்​டேன். 8 மாதங்​களுக்​குப் பிறகு புதி​தாக செல்​போன் செயலியை உரு​வாக்​கினேன். அதை அந்த ஊழியர், நிறுவன மேலா​ளரிடம் காண்​பிக்க அவருக்​குப் பிடித்​திருந்​தது. உடனடி​யாக நிறு​வனத்​தில் சேர்க்​கப்​பட்​டேன். இப்​போது சோஹோ நிறு​வனத்​தில் சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக பணி​யாற்றி வரு​கிறேன். இவ்​வாறு அப்​துல் அலிம் கூறி​யுள்​ளார்.

அப்​துல் அலிமின் சாதனைப் பயணம் தொடர்​பான சமூக வலை​தளப் பதிவு தற்​போது வைரலாகி​யுள்​ளது. அப்​துல் அலிமை சமூக வலை​தள​வாசிகள்​ பா​ராட்​டி வருகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x