Published : 13 Aug 2025 02:55 PM
Last Updated : 13 Aug 2025 02:55 PM

மரணமில்லா பெருவாழ்வுக்கு உறுப்பு தானம்!

இறப்பை கடந்து வாழ்க்கையின் இரக்கம், நம்பிக்கை மற்றும் வெற்றியைக் கொண்டாடும் நாள் இன்று. உலகம் முழுவதும் உடல் உறுப்பு தான தினம் ஆக.13-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மருத்துவ அறிவியல் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ள இந்த உலகில், உறுப்பு தானம் என்பது உறுப்பு செயலிழப்பு காரணமாக அவதிப்படும் ஒருவருக்கு மறுவாழ்வு அளிக்கும் அற்புதமான செயலாகும். இந்தியாவிலேயே தமிழகம்தான் உடல் உறுப்பு தானம் வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது.

அதன்படி, கடந்தாண்டு மூளைச்சாவு அடைந்த 268பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மாற்று அறுவை சிகிச்சைக் கு தேவைப்படும் உறுப்பு கள் கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் 80 சதவீதம் பேர் உடல் உறுப்புகளை தானம் வழங்க உறுதி எடுக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இது 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் 2008-ம் ஆண்டை ஒப்பி டுகையில் தற்போது மத்திய, மாநில அரசுகள், மருத்துவர்கள், ஊடகங்கள் போன்றவற்றால் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் விழிப்புணர்வு காரணமாக உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், 2013-ம் ஆண்டு 5,000-க்கும் குறைவாகதான் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன. 2024-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 18,900-க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாகதேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) தெரிவித்துள்ளது.

உடல் உறுப்பு தானம் குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் திருச்சியின் மூத்த இதய சிகிச்சை நிபுணரும், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நடவடிக்கைக்காக கின்னஸ் சாதனை படைத்தவரு மான மருத்துவர் செந்தில்குமார் நல்லுசாமி 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: உறுப்பு தானம் என்பது உயிர்க் காக்கும் ஒரு நற்செயல். கண், இதயம், நுரை யீரல், கல்லீரல், சிறுநீரகம், எலும்பு, தோல் உள்ளிட்டவைகளை தானமாக வழங்கலாம்.

இதில், உயிரோடு வாழ்பவர்கள், இயற்கை மரணமடைந்தவர்கள், மூளைச்சாவு அடைந்தவர்கள் தங்களது உறுப்புகளை தானமாக அளிக்கலாம். அந்த வகையில் உயிரோடு இருப்பவர் கள் தங்களின் இரு சிறுநீரகங்களில் ஒன்று. நுரையீரல், கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கலாம். இயற்கை மரணமடைந்தவர்களிடம் கண் விழித்திரை, இதய வால்வு கள், தோல், எலும்பு ஆகியவற்றை பெறலாம். மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து

சிறுநீரகம், இதயம், கல்லீரல், கண்கள், இரைப்பை, நுரையீரல், கை, கால்கள், தோல், நரம்புகள் ஆகியவற்றை தானமாக பெறுவதன் மூலம் அவற்றுக்காக காத்திருக்கும் 10 முதல் 12 பேருக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்க முடியும்.

பதிவு செய்வது எப்படி?: கடந்த சில ஆண்டுகளாக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அதி கரித்து வருவது மகிழ்ச்சி அளிக் கிறது. உடல் உறுப்பு தானம் செய்ய ஒருவர் விரும்பினால் அரசு மருத்துவமனை களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். தனியார் தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்யலாம். மேலும், http://transtan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 'டோனர் கார்டு' எனும் அடையாள அட்டையை பெறலாம். உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் தங்களது குடும்பத்தினரிடம் தங்களது விருப்பத்தை கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும்.இதனால், குடும்பத்தின் சம்மதம், உறுப்பை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கலாம்.

விழிப்புணர்வு ஏற்படுத்த...: தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருவது வரவேற்புக் கு உரியது. இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்வது இந்தியாவில் கட்டாயமாக்கப்படவில்லை. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோல மத்திய அரசு உடல் உறுப்பு தானத்தை ஊக்கு விக்கலாம். ஓட்டுநர் உரிமத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் விருப்பம் இருந்தால் பதிவு செய்யும் முறை உள்ளது. அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தி உறுப்புகளை வீணாக்கா மல் பயன்படுத்த முடியும்.

மருத்துவர் செந்தில்குமார் நல்லுசாமி

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பங்கள் அல்லது வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை,வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகியவை அளித்தால், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோல மத்திய அரசு உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கலாம். ஓட்டுநர் உரிமத்தில் தானம் செய்பவர்கள் விருப்பம் இருந்தால் பதிவு செய்யும் முறை உள்ளது.

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை மற்றொருவருக்கு பொருத்த வேண்டிய நேரம் - இதயம்: 6 மணி நேரம் வரை, நுரையீரல்: 4-6 மணி நேரம், கல்லீரல்: 24 மணி நேரம், கணையம்: 24 மணி நேரம், சிறுநீரகம்: 72 மணி நேரம், கண் விழித்திரை: 14 நாட்கள்.

2024-ம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் விவரம் - இந்திய அளவில்.. சிறுநீரகம் = 13,476 பேர், கல்லீரல் = 4,901 பேர், இதயம் = 253 பேர், நுரையீரல் = 228 பேர், கணையம் = 44 பேர், சிறுகுடல் = 9 பேர். தமிழகத்தில்... - சிறுநீரகம் = 1,800 பேர், கல்லீரல் = 600 பேர், இதயம் = 96 பேர், நுரையீரல் = 89 பேர், கணையம் = 3 பேர், சிறுகுடல் = 6 பேர் | தகவல்கள்: மத்திய அரசின் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x