Last Updated : 01 Jul, 2025 09:56 AM

 

Published : 01 Jul 2025 09:56 AM
Last Updated : 01 Jul 2025 09:56 AM

மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியும், நாகரிகமும்!  - ஒரு பார்வை

ஒரு தொழிலாக சேவை செய்யும் மருத்துவம் இன்று பல மாற்றங்களுடனும், சட்ட திட்டத்துக்கு உட்பட்டும் மாபெரும் வர்த்தக ரீதியாக மாறியுள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பாக நமது பண்டைய மருத்துவர்கள் ‘சுர்ருத்தா’ மற்றும் ‘சுக்கரா’ என பண்டைய மருத்துவமான ஆயுர்வேதம் மற்றும் சித்தாவை பயன்படுத்தி மக்களை குணப்படுத்த மருத்துவ சேவை செய்தனர்.

ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இந்தியா உட்படுத்தப்பட்டபோது மேற்கத்திய வைத்தியமுறை நாளடைவில் பின்படுத்தப்பட்டது. அதன் வளர்ச்சி உலகெங்கும் பிரதிபலிப்பதால், ஆங்கிலேய மருத்துவ முறை (Modern Medicine / Allopathi Medicine) பல மாற்றத்துடன் இன்று பின்படுத்தப்படுகின்றது.

1835-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஜனவரி மாதத்தில் துவங்கப்பட்டு மருத்துவக் கல்லூரி, ஆல்யாவிலும் இந்தியாவில் துவங்கப்பட்ட முதன்மை மருத்துவ கல்லூரி ஆகும். 1823-ல் புதுச்சேரியில் துவங்கப்பட்ட Ecole de medicine do pondichery முன்னதாக துவங்கப்படாமலும், பின்னர் இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு ஜிப்மர் ஆக மாற்றப்பட்டது.

மதராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை என்று பெயர் மாற்றப்பட்டாலும்,1835-ல் பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டு மதராஸ் மருத்துவக் கல்லூரி இன்றும் அப்படியே பெயர் மாற்றப்படாமல் உள்ளது. அதன் தொன்மையை நிலைநாட்ட மருத்துவமும் மருத்துவக் கல்லூரியும் இந்திய சுதந்திர வரலாற்றை விட மிகவும் தொன்மையமானது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே அதன் வரலாற்றை எடுத்து உரைத்தோம்.

மருத்துவம், மருத்துவ தொழில் இன்று பல மாற்றங்களை பெற்றுள்ளது. மனசாட்சியுடன் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இயங்கி வந்த மருத்துவம் இன்று பல சட்ட திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றது.

சுதந்திரத்துக்கு முன்பாக மருத்துவ தொழிலுக்கு சட்ட திட்டம் வரைய துவங்கி, இயங்கி வந்த இந்திய மருத்துவ கவுன்சில் 2019-ல் தேசிய மருத்துவ கவுன்சிலாக மாற்றப்பட்டது. மருத்துவ படிப்பு, தரத்தையோ மற்றும் மருத்துவ தொழிலின் இயக்கங்களும், மேற்பார்வையிட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

மருத்துவ வளர்ச்சி மக்கள் கனவுக்கான, முடியாத அளவில் உருமாறி உள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

மாரடைப்புக்கு மூன்று வாரம் மருத்துவமனையில் மருத்துவம் பெற்ற காலம் கடந்து மூன்று நாட்கள் மட்டுமே ரத்த நாளங்கள் வழியாக வைத்தியம் செய்து ஏழு நாட்களில் மீண்டு அவர் அவர் தொழில் செய்ய முன்னேறி உள்ளது.

உடலில் எந்த துவாரம் இருப்பினும், அதில் ஒரு சிறு குழாயை செலுத்தி அதில் ஒரு புகைப்பட கருவி பொருத்தி உடலில் உள்ள உறுப்புகளை படம் எடுத்த காலம் அன்று, இன்று தன் வழியாக அறுவை சிகிச்சை மற்றும் பல மருத்துவ தலையீடு செய்யப்படுகின்றன.

படிம அறிவியல் இன்று புற்றுநோயை வென்றிட பல உருபெற்றுள்ளது. விஞ்ஞான கண்டுபிடிப்பில் மருந்துகளும் பன்மடங்கு புலமையுடன் பெருகி பக்கவிளைவுகள் மிகக் குறைவாக உருப்பெற்று மக்களின் வாழ்வின் நாட்கள் மற்றும் வாழ்க்கை தரத்தையும் பன்மடங்கு உயர்த்தி உள்ளது .

ஐந்தாண்டு இளம்கலை படிப்புடன் இன்று சமுதாயத்தில் மருத்துவத்தின் வளர்ச்சியை அறிந்து விட முடியாது. முதுகலை படிப்பு மனிதனின் உடல் உறுப்புக்கு ஏற்றபடி வளர்ந்து உள்ளது, இருப்பினும் அதை முழுமையாக பயன்றிட வாழ்நாள் முழுவதும் ஒரு மருத்துவர் தொழில் செய்முறையை பயில்கின்றார்.

குடும்பம் மற்றும் பொது வாழ்க்கை என்பது மருத்துவத் தொழில் மிக்க மிக குறைவே என்பதை மக்கள் அறிகின்றபோதும், அவர்களின் எதிர்பார்ப்பை மருத்துவர் அல்லது மருத்துமனை செய்வதில் குறை ஏதும் இருப்பினும் இன்று அவர்களின் எதிர்வினை வன்முறையாக உள்ளது என்பதை அனைவரும் அறிவதே.

நுகர்வோர் நீதி மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது மருத்துவர் மற்றும் மருத்துவத் தொழில் இன்று மக்களின் வன்முறையில் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு சட்டத்தை நாடுகின்றது.

மருத்துவ தொழில் பன்மடங்கு மக்கள் நலனுக்காக முன்னேறி உள்ளபோது மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் உணர்ச்சிக்கு துணை நின்று முன்னேறுகின்ற போது, தற்கால மனிதனை போல் மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீதும் வன்முறையை எடுத்துக்காட்டுவது நாகரிக மக்களின் உகந்த செயல் அல்லவே!

எதிர்பார்க்கும் மக்களும் இன்று மருத்துவம், நோய் தடுப்பு முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றன. எனவே விஞ்ஞான வளர்ச்சியுடன் மருத்துவத்தை பார்க்கவும்.

மருத்துவர் விஞ்ஞான வளர்ச்சியை கொடுப்பதை எவ்வளவு சிரமத்துடன் செயல்படுகின்றனர் என்பதையும் உணர்ந்து நாகரிகமுடன் வன்முறையை விட்டு ஒழித்திட வேண்டும் இந்த ‘மருத்துவர்கள் தினத்தில்’.

- தி. நா. இரவிசங்கர், முன்னாள் தலைவர் - இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு

| இன்று - ஜூலை 1 - தேசிய மருத்துவர்கள் தினம் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x