Published : 15 Feb 2025 10:09 PM
Last Updated : 15 Feb 2025 10:09 PM
பெங்களூரு: பெங்களூருவில் 50 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட 10-வது சர்வதேச மகளிர் மாநாட்டின் தொடக்க விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “ஒவ்வொரு பெண்ணும் அவர்களுக்குள் உள்ள பொக்கிஷமான திறமைகள், நற்பண்புகள், மனம் மற்றும் ஆன்மிக பலத்தை கண்டுணர்ந்து, சமூகத்தில் நேர்மையான மற்றும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரும், வாழும் கலை அமைப்பும், உலகில் உள்ள பல்வேறு மனிதர்கள், அவர்களின் ஆழ்மன அமைதியை தியானத்தின் மூலமும், மனிதாபிமான சேவைகள் மூலமும் கண்டுணர உதவி செய்கிறார்கள்.
நாம் இப்போது தொழில்நுட்ப சீர்குலைவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். இது போன்ற போட்டி மிகுந்த உலகத்தில், நாம் நம் மனிதநேய பண்புகளை தக்க வைத்து கொள்ள வேண்டும். இங்கு தான் பெண்களின் பங்கு மிக முக்கியமாகிறது ஏனென்றால், அவர்களால் தான் கருணையோடும், இரக்கத்தோடும், முன்னிலையெடுக்க முடியும்.
நீங்கள், ஒவ்வொருவரும் அவர்களை வெளிப்படுத்தவும், கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் தேவையான பாதுகாப்பான இடத்தையும், ஆதரவு அமைப்பையும் ஏற்படுத்துவதன் மூலம், அவர்களின் மௌனத்தை உடைத்து விட முடியும். மன தைரியம் இல்லாது, தடைகளையோ, கடினமான மாறா நிலையையோ உடைப்பது இயலாத ஒன்று.
அப்படியே இருங்கள் (Just Be) எனும் தனித்துவமான கருப்பொருளை கொண்ட இந்த மாநாடு, உள்ளுணர்வினை, ஓய்வுபடுத்தி, சமநிலைக்கு கொண்டு வந்து, தன்னை ஏற்றுக்கொள்ளல் மற்றும் வாழ்க்கையின் சவால்களை எதிர்த்தெறியும் வழிகளை காணவும், உலகில் அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவரவும் தேவையானதாய் அமைக்கப்பட்டது.
ஒருவேளை இந்த உலகின் முக்கிய நாடுகளில் பெண்கள் தலைமையற்றிருந்தால், இப்போது நாம் பார்க்கும் பகை, சர்ச்சை, மோதல்கள் குழப்பங்கள் எனும் பல்வேறு சமூக சிதைவுகள் குறைந்திருக்கும், அல்லது நின்று கூட போயிருக்கலாம்” என்றார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்க பேசும்போது, “இந்தியா, பெண்களுக்கு அதிகாரமளித்தல் எவ்வளவு முக்கியம் என்பதையும், அது எவ்வாறு விருத்தி அடைந்திருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறது, இங்கு, புராணங்கள் முக்கிய அமைச்சகங்களை பெண்களுக்கே வழங்கியிருக்கிறது: பாதுகாப்பு துறை - துர்கா, நிதி துறை - லட்சுமி, கல்வி துறை - சரஸ்வதி.
தலைமை பதவிகளை சமநிலைப்படுத்துதலையும், சுய வலிமையோடு சுய ஆய்வு, சுய அன்பு மற்றும் சுய விழிப்புணர்வு என்பதே இந்த 10-வது சர்வதேச மகளிர் மாநாட்டின் பலத்த குரலாக ஒலித்தது. இந்த மாநாடு அதிகார பதிவுகள், தூதரகம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள முதன்மை பெண்மணிகளை ஒன்றிணைத்த ஒரு பிரமாண்ட நிகழ்வாக அமைந்தது” என்றார்.
ஹேமமாலினி எம்.பி பேசும்போது, “நான் எவ்வாறு நடனத்தையும், நடிப்பு பொதுப்பணிகள் இவைகளை நிர்வகிக்கிறேன் என பலர் என்னிடம் கேட்கும் போது, நான் கூறுவது, ‘ஜஸ்ட் பி, நீங்களாக இருங்கள்’. யோகா, நடனம் மற்றும் குருதேவர் கற்றுக்கொடுத்த தியானம் என்னை நானாக இருக்க உதவுகிறது” என்றார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறும்போது, “ஜஸ்ட் பி என்பது பொருள்களுக்கான வெற்றியை நான் துரத்தும் வேளையில் எவ்வாறு நம் நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறது. தியானம் மற்றும் பிராணாயாமம் நம் சமநிலை மற்றும் தெளிவை பெறுவதற்கு உதவுகிறது. எப்போது பெண்கள் அவர்களை அப்படியே தன்னை ஏற்றுக்கொள்கிறார்க்ளோ, அப்போது அவரகள் தைரியம் மற்றும் சுதந்திரத்தை பெறுகிறார்கள்” என்றார்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேசும்பொழுது, “இந்தியாவின் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னுதாரண மாற்றமான, பெண்களின் முன்னேற்றம் என்பதில் இருந்து பெண்களின் தலைமையில் முன்னேற்றம் என்பதை கவனப்படுத்தியிருக்கிறது” என்றார்.
இந்த நிகழ்வில் சேவை, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புக்காக வழங்கப்படும் சிறப்புமிக்க விசாலாக்ஷி விருதுகள் வழங்கப்பட்டன. அன்னபூர்ணா தேவி, ஹேமமாலினி, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பட்ட்ரீஷியா, ஆம்லா ரூயா, டாக்டர் பாக்யஸ்ரீ பிரசாத் படேல், கேத்ரின் விண்டேர் செலரி, பத்மாவதி சுமலதா அம்பரீஷ், சங்கீதா ஜிந்தால் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT