Published : 30 Oct 2024 05:45 PM
Last Updated : 30 Oct 2024 05:45 PM
கோவை: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் லட்டு, ஜிலேபி, மைசூர்பா தொடங்கி பலவகைஇனிப்பு வகைகள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில் பல வகை இனிப்பு, கார வகைகளை ருசிக்க அனைவரும் காத்திருக்கின்றனர். அதேவேளையில் அதிகளவில் செயற்கை நிறமிகள்சேர்க்கப்பட்ட இனிப்பு, கார வகைகள் அதிகளவில் சாப்பிடுவதால் ஒவ்வாமை, வயிறு உபாதைபோன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு சிலநிறமிகள் ஒவ்வாமை போன்றபாதிப்புகளை ஏற்படுத்தலாம் என உணவுப்பாதுகாப்புத் துறையும்,ஊட்டச்சத்து நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, ஊட்டச்சத்து நிபுணர் வனஜா சுதாகர் கூறியதாவது: மஞ்சள் (டார்டிராசின் - E102): லட்டு மற்றும் ஜிலேபியில் சேர்க்கப்படுகிறது. இந்த மஞ்சள் நிறத்தால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஹைபர் ஆக்டிவ் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ரெட் (4R - E124): இந்தநிறமிகுலாப் ஜாமூன், அல்வா ஆகியவைகளில் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஆஸ்துமாமற்றும் நடத்தை மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது.
ஆரஞ்சு (E110): இந்த வகை நிறமியால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் ஹைபர் ஆக்டிவ் ஏற்படுத்துகிறது. பசுமை (ஃபாஸ்ட் கிரீன் - E143): இந்த நிறமி பிஸ்தா பர்பி ஆகிய இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தோல் அரிப்பு, குமட்டல் ஆகியவை ஏற்படுகிறது. பிரவுன் (சாக்லேட் பிரவுன் HT - E155): இந்த நிறமி சாக்லேட்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை நிறமியால் ஒவ்வாமை ஏற்படுவதால் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.காஜு கத்திலி போன்ற இனிப்புகளில் சில்வர் தாள்கள் (சில்வர்ஃபாயில்) பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் சில்வர் தாள்களுக்குப் பதிலாக அலுமினிய தாள் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்பவர்களுக்கு இரைப்பை குடல், சிறுநீரக அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. செயற்கை நிறமிகளை தவிர்த்து குங்குமப்பூ, பீட்ரூட், மஞ்சள் போன்ற இயற்கை நிறமிகளை பயன்படுத்துவதால் உடல்நல பாதிப்புகள் வராது. வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை உட்கொள்வதால் உடல் நலம்பாதுகாக்கப்படும். இல்லையெனில் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றகடைகளில் இனிப்பு,பலகாரங்களை வாங்கி சாப்பிடலாம். இவ்வாறு அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT