Published : 06 Apr 2023 06:54 AM
Last Updated : 06 Apr 2023 06:54 AM

கேரள ரயிலில் தீவைத்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கேரளாவில் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஷாருக் செய்பியை போலீஸார் நேற்றுமகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் கைது செய்தனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: கேரள ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த வழக்கில் தப்பியோடிய நபரை மகாராஷ்டிராவில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. எலத்தூர் அருகே இந்த ரயில் சென்றபோது மர்ம நபர் ஒருவர் டி-1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தப்பியோடிய நபரின் படத்தை சக பயணிகள் கொடுத்த தகவல்களின்படி வரைந்து போலீஸார் வெளியிட்டனர். இந்நிலையில் தப்பியோடிய நபர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் அவரை மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் போலீஸார் நேற்று கைது செய்தனர். மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படை போலீஸார் மற்றும் மத்திய உளவுப் பிரிவு போலீஸாரின் உதவியுடன் இந்த கைது சம்பவம் நடைபெற்றது.

இந்நிலையில் கைதான 24 வயதான ஷாருக்கை கேரளாவுக்கு அழைத்து வர கேரள போலீஸார் ரத்னகிரிக்கு வந்துள்ளனர். அவர் தச்சுத் தொழிலாளி என்றும் தெரியவந்துள்ளது.

இதனிடையே சந்தேகப்படும் நபரை கைது செய்ய உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும், போலீஸாருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x