Published : 03 Apr 2023 09:11 AM
Last Updated : 03 Apr 2023 09:11 AM
ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் இடையே பயணித்த ரயிலில் பயணி ஒருவரை சக பயணிக்கு தீ வைத்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத சதி இருக்கிறதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆலப்புழா - கண்ணூர் இடையே பயணித்த ரயிலில் முன்பதிவு செய்த படணிகளுக்கான டி1 பெட்டியில் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் எண்ணெய்யை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். இச்சம்பவம் ரயில் நேற்றிரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் நடந்துள்ளது. இந்த தீவைப்பு சம்பவத்தால் ரயிலில் இருந்த நிறைய 9 பேருக்கு தீக்காயஙக்ள் ஏற்பட்டுள்ளது.
மேலும் ரயில் தண்டவாளத்திலிருந்து ஒரு குழந்தை உட்பட மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ரயிலில் தீ பிடிக்கும் எனப் பயந்து அந்த மூவரும் ரயிலில் இருந்து குதித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தவ்ஃபீக், மற்றொருவர் ரெஹானா என அடையாளம் தெரியவந்துள்ளது. மேலும் தண்டவாளத்தில் கிடந்த ஒரு பையிலிருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் பெட்ரோல் பாட்டில் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. இதனால் இந்தச் சம்பவத்தில் ஏதேனும் தீவிரவாத சதி இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் எதிரே அமர்ந்திருந்த பயணியின் மீது ஏதோ ஸ்ப்ரேயர் மூலம் ஸ்ப்ரே செய்தார். நாங்கள் என்ன நடக்கிறது என ஊகிக்கும் முன்னர் அவர் அந்த நபர் மீது தீவைத்துவிட்டு தப்பிவிட்டார்" என்றனர்.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவர் கூறுகையில், "கோரப்புழா ஆற்றுப்பாலத்தில் ரயில் நின்றபோது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலத்திலிருந்து குதித்து கீழே காத்திருந்த நபருடன் பைக்கில் சென்றுவிட்டார்" என்றார்.
அங்கிருந்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT