Published : 01 Jul 2014 12:49 PM
Last Updated : 01 Jul 2014 12:49 PM
பிரபல சரோட் இசைக் கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சரோட் இசைக் கருவி விமானப் பயணத்தின்போது காணாமல் போனது.
பத்ம விபூஷண் விருது பெற்ற அம்ஜத் அலி கான், ஜூன் 21 முதல் 28ம் தேதி வரை லண்டனில் டேரிங்டன் கல்லூரியில் ரவீந்திர நாத் தாகூர் பற்றிய இசை நிகழ்ச் சியை நடத்தினார்.
நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டு, அவரும் அவரது மனைவி சுபலட்சுமியும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டனில் இருந்து டெல்லிக்கு வந்து சேர்ந்த பிறகு தான் அவரது சரோட் இசைக் கருவி யைக் காணவில்லை என்பது தெரிந்தது. இதுகுறித்து அம்ஜத் அலி கான் கூறும்போது, "விமான நிறுவன பணியாளர்களிடம் புகார் செய்தோம். அடுத்த விமானத்தில் அந்தக் கருவி வரலாம் என்று பணி யாளர்கள் கூறினார்கள். ஆனால் 48 மணி நேரத்துக்கு மேலாகியும் இன்னும் எந்த ஒரு செய்தியும் வரவில்லை. அவ்வளவு பெரிய விமான நிறுவனம் எப்படி இவ்வாறு பொறுப்பில்லாமல் இருக்கலாம்" என்றார்.
இது தொடர்பாக விமான நிறு வனத்திடம் கேட்டபோது, "லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் 5-ம் டெர்மினலில் இடைவிடாத பிரச் சினைகள் நிகழ்ந்து கொண்டிருக் கின்றன. எங்கள் பயணிகளின் உடைமைகளை உரியவர்களிடம் சேர்க்க நாங்கள் 24 மணி நேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கி றோம். நாங்கள் நினைத்ததை விடவும் அதிக அளவில் பிரச்சினை கள் இருப்பதால் அதனால் ஏற் பட்ட சங்கடங்களுக்கு வருந்து கிறோம்" என்றனர்.
தன்னுடைய சரோட் காணா மல்போனது பற்றி விமான நிறு வனத்திடம் புகார் அளித்திருந் தாலும், அதனிடமிருந்து எந்த ஓர் இழப்பீடும் தனக்கு வேண்டாம் என்று நிராகரித்துள்ளார் அம்ஜத் அலி கான்.
"என்னுடைய விலைமதிக்க முடியாத சரோட் கருவியை அவர்கள் தேடிக் கண்டுபிடித்து என்னிடம் கொடுத்துவிட்டால் போதும். வேறு எந்த இழப்பீடும் தேவையில்லை. அதுதான் என்னுடைய வாழ்க்கை என்பதால் அதை அவ்வளவு பத்திரமாகப் பாதுகாத்தேன். அதன் மூலமாகத்தான் நான் 45 வருடங்களாக உலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தேன். இனி நான் இந்த உலகத்தை எப்படி தொடர்பு கொள்வேன்" என வருத்தத்துடன் தெரிவித்தார் அம்ஜத் அலி கான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT