Published : 02 Jun 2014 08:10 AM
Last Updated : 02 Jun 2014 08:10 AM
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை விமர் சித்து கருத்து கூறிய ராஜஸ்தான் எம்எல்ஏ பன்வர் லால் சர்மா ஞாயிற்றுக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலர் பொறுப் பில் உள்ள குருதாஸ் காமத் உத்தரவின்படி சர்மாவை சஸ்பென்ட் செய்துள்ளதாக ராஜஸ் தான் காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் அர்சனா சர்மா கூறினார்.
ராகுல் காந்தி திசை தெரியாமல் செல்கிறார். அவருக்கு கொள்கை எதுவும் இல்லை. அரசியல் தெரியாதவர்கள் அவருக்கு ஆலோசகர்களாக இருப்பதாக வும் சனிக்கிழமை தாக்கிப் பேசி இருந்தார் சர்மா.
காங்கிரஸ் சர்க்கஸ் கம்பெனி யில் உள்ள கோமாளிக் குழுவின் நிர்வாக இயக்குநர் ராகுல் காந்தி. மக்களவைத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கு ராகுலும் அவரது ஆலோசகர்களுமே காரணம்.
ராகுல் மீது பாசம் காட்டுவதை விட்டுவிட்டு கட்சியை வலுப்படுத் தும் நடவடிக்கைகளை கட்சித் தலைவர் சோனியாகாந்தி மேற் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார். இதற்கிடையே, காங்கிரஸ் நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, ‘இது பற்றி கவலை இல்லை; ராகுல் பற்றி நான் சொன்னது சரியானதுதான்’ என்று கூறினார்.
6-வது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி உள்ள சர்மா, ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கு தற்போது சர்தார்சாகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ராகுலை விமர்சித்ததாக கட்சி யிலிருந்து சஸ்பெண்ட் செய் யப்படும் இரண்டாவது தலைவர் சர்மா. முன்னதாக கேரளத்தைச் சேர்ந்த கட்சித் தலைவரான டி.எச்.முஸ்தபா ,வியாழக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோமாளிபோல ராகுல் செயல்ப டுவது தேர்தலில் உதவாது என்றும் கட்சியின் எல்லா பொறுப்புகளிலிருந்தும் அவரை விலக்கிவிட்டு பிரியங் காவை புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT