Published : 03 Apr 2022 11:43 AM
Last Updated : 03 Apr 2022 11:43 AM
வரும் 2024-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு அமைந்துள்ளது.
வரும் ஜூன், ஜூலைக்குள் மாநிலங்களவையில் 53 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிய வுள்ளது. 20 எம்.பி.க்கள் ஜூனிலும், 33 எம்.பி.க்கள் ஜூலையிலும் ஓய்வு பெறவுள்ளனர். இதில் 11 எம்.பி.க்கள் உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்.
கணிசமான இடங்கள்
தற்போது உ.பி.யில் பாஜக எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதால், அதில் கணிசமான இடங்களை பாஜக பெறும். மேலும் 2024-ம் ஆண்டுக்குள் மேலும் 54 எம்.பி.க்கள் ஓய்வுபெறவுள்ளனர். இதனால் பாஜகவின் பலம் மாநிலங்களவையில் மேலும் உயரக்கூடும்.
குஜராத், இமாச்சல், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங் களில் மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம் காலியாகவுள்ளது.
2024 ஏப்ரல் மாதத்துக்குள் மாநிலங்களவையில் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெற்றால், 1982-ம் ஆண்டு முதல் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் தனிப் பெரும்பான்மை பெற்றமுதல் கட்சி பாஜகவாக இருக்கும்.
இதனிடையே நியமன எம்.பி.க்கள் சுப்பிரமணியன் சுவாமி, மேரி கோம், ஸ்வபன் தாஸ் குப்தா, ரூபா கங்குலி, சுரேஷ் கோபி, நரேந்திர ஜாதவ், சாம் பாஜி சத்ரபதி ஆகியோர் மே மாதத் துக்குள் ஓய்வு பெறுகின்றனர்.
தற்போதுள்ள விதிகளின்படி இலக்கியம், அறிவியல், கலை,சமூக சேவை உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த12 பேரை நியமனஎம்.பி.க்களாக மாநிலங்களவை யில் குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய முடியும்.
இதன்மூலம் 2024 ஏப்ரல்மாதத்துக்குள் மாநிலங்களவை யில் பாஜகவின் பலம் கணிசமாக உயரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT