Published : 20 Feb 2022 07:09 AM
Last Updated : 20 Feb 2022 07:09 AM
மணிப்பூரில் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் பேரவைக்கு பிப்ரவரி 28, மார்ச் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில்முதல்கட்ட தேர்தல் நடைபெறும்38 தொகுதிகளில் 15 பெண்கள்உட்பட173 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இந்த வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்திரங்களை தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்)ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மணிப்பூரில் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 173 வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. இவர்களில் 16 சதவீதம் பேர் மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளன. 2 வேட்பாளர்கள் தங்கள் மீதுபெண்களுக்கு எதிரான குற்றவழக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 2 பேர் மீது கொலை வழக்கும் 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளது.
முக்கிய கட்சிகளை பொறுத்தவரை பாஜக சார்பில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 11 பேர் (29%) மீது குற்ற வழக்கு உள்ளது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்கள் 28 பேரில் 7 பேர் (25%) மீதும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 பேரில் 8 பேர் (23%) மீதும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) வேட்பாளர்கள் 27 பேரில் 3 பேர் (11%) மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
இதுபோல் பாஜக வேட்பாளர்கள் 10 பேர் (26%), ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் 5 பேர்(18%), காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 பேர் (11%), என்பிபி வேட்பாளர்கள் 2 பேர் (7%) மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT