Published : 03 Jan 2022 06:51 AM
Last Updated : 03 Jan 2022 06:51 AM
ஒவ்வொரு ஆண்டுஇறுதியிலும் பிஹார் அமைச்சர்கள் தங்களது குடும்ப சொத்து விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளனர். முதல்வர் நிதிஷ் குமாரிடம் ரொக்கமாக ரூ.29,385-ம், வங்கியில் ரூ.42,763-ம்உள்ளது. அவரது மகன் நிஷாந்திடம் ரொக்கமாக ரூ.16,549-ம், வங்கியில் வைப்பு தொகையாக ரூ.1.28 கோடியும் உள்ளது.
நிதிஷ் குமாரிடம் ரூ.75.36 லட்சத்துக்கு அசையும், அசையாசொத்துகள் உள்ளன. அவரதுமகனிடம் ரூ.3.61 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளன. தந்தையை விட மகனிடம் 5 மடங்கு அதிகமாக சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT