Published : 29 Dec 2021 06:16 AM
Last Updated : 29 Dec 2021 06:16 AM

மோதல் வாய்ப்பை நிராகரிக்க முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

புதுடெல்லி

இன்றைய நிச்சயமற்ற சூழலில் மோதல் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

எல்லை சாலைகள் அமைப்பால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 27 திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தற்போதைய நிச்சயமற்ற சூழலில் எந்த விதமான மோதல் வாய்ப்புகள் இருப்பதையும் நிராகரிக்க முடியாது. இத்தகைய சூழ்நிலைகள் எல்லைப் பகுதிகளின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் நம்மை தயார்படுத்துகின்றன. திறமையான, அர்ப்பணிப்புள்ள, எல்லைப் பகுதியின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் அமைப்பாக எல்லை சாலைகள் அமைப்பு இருப்பது நமக்கு பெருமையளிக்கிறது. எல்லைப் பகுதியின் வளர்ச்சியில் சிறப்பாக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. அவற்றில் கவனம் செலுத்தி அடிப்படை அளவிலான தேவைகளை பூர்த்தி செய்ய அரசு பணியாற்றியது. வளரும் நாடுகளுக்கு சாலைகள் இணைப்பு முக்கியமானது. தெற்கு லடாக்கில் உள்ள உம்லிங்-லா கணவாயில் 19,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட சாலை உலகிலேயே உயரமானது. அந்த சாலையை கட்டமைத்த பெருமை எல்லை சாலைகள் அமைப்பை சேரும். இது ராணுவப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி அந்தப் பகுதியின் சுற்றுலாவுக்கும் ஊக்கமளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x