Published : 27 Dec 2021 07:38 AM
Last Updated : 27 Dec 2021 07:38 AM
ஜனவரி 3-ம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரையிலான சிறுவர், சிறுமி களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவ நிபுணரும் இந்திய பொது சுகாதார சங்கத்தின் தலைவருமான சஞ்சய் கே.ராய் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து தன்னலமற்ற வகையில் நாட்டுக்கு சேவை செய்யும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய விசிறி நான். ஆனால், சிறுவர்களுக்கு தடுப் பூசி செலுத்தும் முடிவை அமல் படுத்துவற்கு முன் ஏற்கெனவே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளில் நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.
இங்கிலாந்தில் இப்போது தினமும் 50 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தடுப்பூசியால் கரோ னாவை தடுக்க முடியாது என்பது நிரூபணமாகிறது. தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 90 சதவீதம் வரை இறப்பை தடுக்கலாம்.
10 லட்சம் மக்கள் தொகையில் 15,000 பேர் இறக்கும் அபாயம் இருந்தால் தடுப்பூசியால் 14,000 இறப்புகள் வரை தடுக்க முடியும். பெரியவர்களுக்கு தடுப்பூசி பலன் உள்ளதாக இருக்கும். ஆனால், சிறுவர்கள் 10 லட்சம் பேரில் 2 பேர் மட்டுமே இறந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அறிவியல் பூர்வ மற்றது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால் எந்த கூடுதல் பலனும் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT