Published : 20 Jun 2014 09:39 AM
Last Updated : 20 Jun 2014 09:39 AM
புதிய ராணுவ தலைமைத் தளபதி நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனு ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராணுவ தலைமைத் தளபதி யாக விக்ரம் சிங் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமைத் தளபதி யாக தல்பீர் சிங் சுஹாக் நிய மிக்கப்பட்டுள்ளார். இவர் தற் போது ராணுவ துணைத் தளபதி யாக உள்ளார். கடந்த ஆட்சி யில் இவரது பெயர் பரிந்துரைக் கப்பட்டு, புதிய அரசும் இவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்து விட்டது.
தல்பீர் சிங் சுஹாக்கை கிழக்கு பிராந்திய தளபதியாகவும், சஞ்சீவ் சாச்ராவை மேற்கு பிராந்திய தளபதியாகவும் நியமித்தபோது, அதை எதிர்த்து லெப்டினன்ட் ஜெனரல் ரவி தஸ்தானே வழக்கு தொடர்ந்தார். இவர்களது பணி நியமனத்துக்கு பணிமூப்பு, தகுதியை கருத்தில் கொள்ள வில்லை. இப்பதவிகளுக்கு தலா ஒரு பெயர் மட்டுமே அமைச் சரவை நியமனக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது தவறானது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.கே.சிங் அடங்கிய அமர்வு முன்பு தஸ்தானே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள சுஹாக், ஆகஸ்ட் 1 ம் தேதி பொறுப்பேற்று விடுவார். அவரது நியமனத்தை எதிர்த்த வழக்கு விசாரணை செப்டம்பரில் தான் விசாரணைக்கு வரும். அவர் கமாண்டராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வந்தால், அவரது அடுத்த நியமனமும் செல்லாததாகிவிடும்.
எனவே, புதிய தளபதியாக சுஹாக் பதவி யேற்கும் முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று முறையிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கள், புதிய தலைமைத் தளபதி நிய மனத்தை எதிர்த்த வழக்கின் விசா ரணையை ஜூலை 2வது வாரத்தில் பட்டியலிட உத்தரவிட்டனர்.
புதிய தலைமைத் தளபதி நியமனத்துக்கு மத்திய வெளி யுறவுத்துறை இணை அமைச்சரும் முன்னாள் தலைமைத் தளபதியு மான வி.கே.சிங்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள பதிலில், ‘‘தல்பீர் சிங் சுஹாக் மீதான குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட செயல், ஆதாரமற்ற பொதுவான குற்றச்சாட்டு, அவர் மீதான நட வடிக்கை சட்ட விரோதமானது’’ என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT