Published : 26 Jun 2014 09:36 AM
Last Updated : 26 Jun 2014 09:36 AM

அண்ணா பல்கலைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்- 10 இன்ஜினீயரிங் கல்லூரிகள் அங்கீகார விவகாரம்

தமிழகத்தில் உள்ள 10 இன்ஜினீ யரிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) உரிய காலத்துக்குள் புதிய படிப்பு களுக்கு அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்ததால், அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் இடம்பெற முடியாமல் போனதை சுட்டிக் காட்டி, தமிழகத்தைச் சேர்ந்த 10 இன்ஜினீயரிங் கல்லூரி கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவ கீர்த்தி சிங் அடங்கிய அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. கல்லூரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ், ‘‘இந்த கல்வியாண்டுக்கு கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நடை முறையை அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் ஏப்ரல் 10-ம் தேதியே முடிக்க வேண்டும். ஆனால், ஜூன் 10-ம் தேதி வரை இரண்டு மாதம் தாமதப்படுத்தி விட்டது. ஜூன் 19-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிக்கை வெளியிட்டது. இந்த குறுகிய காலகட்டத்தில் விண்ணப்பித்து, அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தை எங்களால் பெற முடியவில்லை. இந்த ஆண்டே பல்கலை ஒப்பு தல் அளிக்காவிட்டால், கல்லூரி களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, இந்த கல்வியாண்டே ஒப்புதல் அளித்து மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.

ஏஐசிடிஇ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அம்தீஷ் குமார், ‘‘நாடு முழுவதும் 10 ஆயிரம் இன்ஜினீயரிங் கல்லூரிகளிட மிருந்து எங்களுக்கு விண்ணப்பங் கள் வருகின்றன. இவற்றை பரிசீலித்து அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது. இந்த ஆண்டு 300 கல்லூரிகளுக்கு உரிய காலகட்டத்தை தாண்டி அனுமதி அளிக்க வேண்டியதாகி விட்டது. இதற்காக இந்த கல்வி யாண்டின் கடைசி தேதியை தள்ளிவைக்கக் கோரி ஏஐசிடிஇ சார்பில் மனு தாக்கல் செய்துள் ளோம். அந்த மனு மீது உத்தரவு வழங்கப்பட்டால் இப்பிரச்னை முடிவுக்கு வந்து விடும்’’ என்றார்.

ஏஐசிடிஇ மனுவையும் சேர்த்து வியாழனன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதிகள் உத்தர விட்டனர். இதற்கிடையே, 10 கல்லூரிகளுக்கு இந்த கல்வி யாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x