Published : 16 Jun 2014 09:31 AM
Last Updated : 16 Jun 2014 09:31 AM
நம் நாட்டில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 50 சதவீதம்பேர் தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப் படுகிறார்கள் என 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15-ம் தேதி 'உலக முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்பு ணர்வு தினமாக' அனுசரிக்கப்படு கிறது. இதை அனுசரிக்கும் வகை யில் கர்நாடக முதியவர்கள் சங்கம் சார்பாக சனிக்கிழமை பெங்க ளூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கர்நாடக மாநில 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' நிறுவனத்தின் இணை இயக்குநர் ரேகா மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசுகையில், "ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் சார்பாக, கடந்த 7 ஆண்டுகளாக நாட்டி லுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
இந்த ஆண்டு நாட்டிலுள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 12 பெரிய மாநகரங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,200 ஆண் மற்றும் பெண் முதியவர்களிடம் ஆய்வு நடத்தினோம்.
அதில் 50 சதவீதமான முதியவர் கள் தங்களுடைய மருமகள், பிள்ளைகள் மற்றும் உறவினர் களால் அவமதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ள னர். இதில் ஆண்கள் 38 சதவீத மும், பெண்கள் 53 சதவீதமும் அவமதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 23 சதவீதமாக இருந்த முதியவர் களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
பெங்களூர் முதலிடம்
நாட்டிலே பெங்களூரில் தான் 75 சதவீத, அதாவது அதிக அளவில் அவமதிக்கப்படுகிறார்கள். முதியவர்களை அவமதிப்பதில் சென்னை 53 சதவீதமும், டெல்லி 22 சதவீதமும், கான்பூர் 13 சதவீதமும் (கடைசி இடம்) பெற்றிருக்கிறது.
இதில் 77 % அவமதிப்புகள் குடும்ப உறவுகளால் ஏற்படுகின்றன. மற்றவை சாலை, பேருந்து நிலையம், மருத்து வமனை, கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் அவமதிக்கப்ப டுகின்றனர். நாட்டில் 61% முதிய வர்கள் தங்களுடைய மருமகளா லும், 59 சதவீத பெற்றோர் தங்களு டைய மகனாலும் அவமதிக்கப் படுகின்றனர். பெங்களூரை பொறுத்தவரை 65 சதவீதம் மகனாலும், 45 சதவீதம் மருமக ளாலும் அவமதிக்கப் படுகின்றனர்.
ஆண்டுதோறும் முதியவர் களை அவமதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதற்கு என்ன காரணம் என முதியவர்களிடம் கேட்டபோது, ‘‘எங்களுக்கு வயதாகி விட்டது. வேலை செய்ய முடிவதில்லை. அதனால் பணம் சம்பாதிக்கவும் முடியாது. எனவே அவர்கள் எங்களை பாரமாக நினைத்து வதைக்கிறார்கள்'' என்றார்கள்.
சட்டப்படி நடவடிக்கை
முதியவர்கள் துன்புறுத்தப் படுவதை தடுக்கும் வகையில், கடந்த 2007-ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் வதைபடும் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் அவசர தொலைபேசி எண்களும் கொடுக் கப்பட்டுள்ளன. இது பற்றிய விழிப்பு ணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லா ததால் முதியவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. மேலும் அரசு சார்பாக முதியவர் களை பாதுகாக்கும் வகையில் மாவட்டந்தோறும் உதவி மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT