Published : 02 Jun 2014 05:02 PM
Last Updated : 02 Jun 2014 05:02 PM
உத்தர பிரதேசத்தில், 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மகளர் அமைப்பினர் முதல்வர் அகிலேஷ் யாதவ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கூட்டத்தை கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை கலைத்தனர்.
உத்தர பிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மகளிரணியினர் மாநில முதல்வர் அகிலேஷ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனிடையே கூட்டத்தின் ஒரு பகுதியினர் அகிலேஷ் யாதவின் அலுவலகத்தினுள் நுழைய முயன்றனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துதுறையினர், அங்கிருந்த பெண்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கும் மகளிர் அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக தொண்டர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் சிலர் காயமடைந்தனர்.
இது குறித்து அந்த மாநில பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான குசம் ராய் கூறுகையில், இங்கிருக்கும் போலீசார் முதல்வரின் உத்தரவின் பேரில் எங்களை அடக்க முற்படுகின்றனர். பாதுகாக்க வேண்டியவர்கள் குண்டர்களை போல் செயல்படுகிறார்கள்.
மகளிர் அமைப்பு இதற்கெல்லாம் பயந்து ஒடுங்காது. இந்த மாநிலத்தில் பெண்களுக்கென பாதுகாப்பான சூழல் ஏற்படும் வரை போராட்டங்கள் தொடரும். இங்கு குற்றவாளிகளை தான் ஆதரவும் பாதுகாப்பும் இருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் 73 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எங்களால் பெண்கள் மீதான கொடுமைகளையும் பலாத்கார அட்டூழியங்களை பார்த்து அமைதியாக இருக்க முடியாது” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT