Published : 15 Jun 2014 06:39 PM
Last Updated : 15 Jun 2014 06:39 PM
தொழில், கல்வி மற்றும் அறக் கட்டளை ஆகிய துறைகளில் அளித்து வரும் சிறந்த பங்களிப் புக்காக வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபரும் கபாரோ குழும தலைவருமான ஸ்வராஜ் பாலுக்கு பிரிட்டனில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது.
பிரிட்டனின் பிளாக் கன்ட்ரி ஆசிய வர்த்தக சங்கத்தின் (பிசிஏபிஏ) வருடாந்திர விருது வழங்கும் விழா வெஸ்ட் மிட்லேன் ட்ஸை அடுத்த வெட்னஸ்பரி நகரில் வெள்ளிக் கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்வராஜ் பால் சார்பாக அவரது மகள் அஞ்சலி இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். வர்த்தக நிமித்தமாக அமெரிக்கா சென்றிருப்பதால் பால் இதில் கலந்துகொள்ளவில்லை.
விருதைப் பெற்றுக் கொண்ட அஞ்சலி, தனது தந்தையின் சார்பில் ஏற்புரையை வாசித்தார். அதில் பால் கூறியிருப்பதாவது:
வெஸ்ட் மிட்லேன்ட்ஸில் உள்ள பிளாக் கன்ட்ரி பகுதி யில் முதன்முதலாக எல்.கே. இண்டஸ்ட்ரியல் என்ற பெயரில் சிறிய நிறுவனத்தைத் தொடங்கி னேன். பின்னர் இந்த நிறுவ னத்தை கபாரோ இண்ட ஸ்ட்ரீஸ் என பெயர் மாற்றினேன்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த சில தொழிற்சாலைகளை வாங்கினேன். கபாரோ குழுமத் தின் மூலம் இப்போது இரும்பை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் 23 இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த 1999-ம் ஆண்டு முதல் உல்வர்ஹாம்டன் பல்கலைக் கழகத்தின் வேந்தராக உள்ளேன். 190 ஆண்டுகளுக்கு முன்பு உல்வர்ஹாம்டன் மெக்கானிக்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் தொடங்கப்பட்டதுதான் இந்தப் பல்கலைக்கழகம். இப்போது இங்கு தரமான கல்வி வழங்கப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
அறக்கட்டளைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வரும் பால், தொழிலாளர் கட்சி யைச்சேர்ந்தவர் ஆவார். இவர் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக் கழகத்தின் வேந்தராக வும் உள்ளார். இவருக்கு கடந்த 1983-ம் ஆண்டு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT