Published : 09 Jun 2014 09:50 AM
Last Updated : 09 Jun 2014 09:50 AM
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விய டைந்ததற்கு கட்சியின் தலைமை தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.ஆர்.அந்துலே கூறியுள்ளார்.
அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக குற்றம் சாட்டியே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கடந்த முறை 206 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இப்போது 44 இடங்களில் மட்டுமே வென்றது. அக்கட்சியின் வீழ்ச்சிக்கு யார் காரணம் என்று இந்திரா காந்தி காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய மூத்த தலைவர் ஏ.ஆர்.அந்துலேவிடம் (85) பி.டி.ஐ. செய்தியாளர் கேட்டபோது, "இதற்குக் காரணம் கட்சித் தலைமைதான். எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுவிட்டது.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியு டன் கூட்டணி அமைத்து மகாராஷ் டிரத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸால், இத்தேர்தலில் மொத்தமுள்ள 48 இடங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
1978-ம் ஆண்டு காங்கிரஸ் (ஐ) கட்சியை இந்திரா காந்தி தொடங்கியபோது, கட்சியினரை அவர் ஊக்குவித்தார். மிகத் தீவிர மாக நாங்கள் உழைத்ததால் இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தோம். ஆனால், இப்போது தேர்தலில் தோல்வியடைந்ததைப் பற்றியோ இதற்குப் பிறகு கட்சியை எப்படி வழிநடத்துவது என்பது குறித்தோ இதுவரை கட்சித் தலைமையிடத்தில் இருந்து யாரும் என்னைப் போன்றவர் களை அணுகி ஆலோசனை பெற வில்லை.
தேர்தலில் தோல்வியடைந்தது பற்றி கட்சித் தலைமையே கவலை கொள்ளாத போது, யார் என்னதான் சொல்லிவிட முடியும்" என்றார் அந்துலே.
முன்னாள் மகாராஷ்டிர முதல்வரான ஏ.ஆர்.அந்துலே, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராய்காட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அத்தொகுதியில் சிவசேனையின் ஆனந்த் கீத் வெற்றிபெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT