Published : 28 Jun 2014 09:16 AM
Last Updated : 28 Jun 2014 09:16 AM

பள்ளிகளில் பாலியல் கல்விக்கு தடை விதிக்க பரிந்துரைக்கவில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

பள்ளிகளில் பாலியல் கல்விக்கு தடை விதிக்க பரிந்துரைக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.

பள்ளிகளில் பாலியல் கல்விக்கு தடை விதிக்க சுகாதார அமைச்சர் பரிந்துரைத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் ஹர்ஷவர்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “எனது இணைய தளத்தில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளவை எனது சொந்த கருத்துகள் ஆகும். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அதன் மூல வடிவத்தில் அறிமுகம் செய்ய 2007-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தபோது, அதையொட்டி நான் இந்தக் கருத்துகளை கூறியிருந்தேன்.

நான் ஒரு மருத்துவர். அறிவார்ந்த விஷயங்களை பின்பற்றுபவன். பாலியல் கல்வியை முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.

நெறி சார்ந்த பள்ளிக் கல்வி முறையே அனைத்து நாடுகளிலும் பொதுவான அம்சமாக உள்ளது. டெல்லி பள்ளிகளிலும் இதை செயல்படுத்திட நான் விரும்பினேன்.

முந்தைய அரசின் பாலியல் கல்வித் திட்டத்தில் கலாச்சார ரீதியில் ஆட்சேபிக்கத்தக்க குறியீடுகள் இடம் பெற்றிருந்தன. இதை பாலியல் கல்வி என்று கூற முடியாது. எந்தவொரு கல்வி முறையும் பொருத்தமான பாடத்திட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில் எனது கருத்துகள் சரியானதே.

பாலியல் கல்வி மூலம் பாலினப் பாகுபாடு இல்லாத சமூகம் உரு வாகும். மேலும் இளம் பருவத் தில் கர்ப்பமடைதல், எச்.ஐ.வி. பாதிப்பு போன்ற பாதிப்புகளும் நீங்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x