Published : 10 May 2014 02:23 PM
Last Updated : 10 May 2014 02:23 PM
அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன்ர். நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி ஆகி உள்ளனர்.
அசாமின் தெற்கு பகுதியில் பரவலாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தென் பகுதிகளில் மழையுடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்கு பல சாலைகள் துண்டிக்கப்பட்டது. அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் நிலச்சரிவில் மண்ணில் புதைந்து 7 பேர் பலியாகி உள்ளனர்.
பலத்த மழை மற்றும் நிலச்சரிவால் சாலைகள் மண்ணால் மூடப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் இருந்த வீடுகள் மன்னில் புதைந்துள்ளன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அருணாச்சலிலும் பாதிப்பு:
அருணாச்சல பிரதேசத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கடும் நிலச்சரிவால் சுமார் 5 கி.மீ அளவில் சாலைகள் ஸ்தம்பித்துள்ளது. தொடர் மழையால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பளு துக்கும் இயந்திரங்கள் கொண்டு முக்கிய சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு பாதிப்புகளை சீர்செய்யும் பணியில், எல்லைப்புற சாலைகள் அமைப்பு அதிகாரிகளும், காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப்பணிகள் இன்னும் 2 நாள்கள் வரை நடைபெறலாம் என்றும் அதுவரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், வனத் துறையினர் தெவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT