Published : 31 May 2020 04:55 PM
Last Updated : 31 May 2020 04:55 PM
கரோனா வைரஸ் குஜராத்திலும், மும்பையிலும், டெல்லியிலும் பரவுவதக்கு அகமதாபாத்தில் பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்துவந்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் காரணம் என்று சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபின் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 65 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் பாதி்கப்பட்டுல்ளனர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தியது காரணம் என சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் குற்றம்சாட்டியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள மொடேரேவில் உலகிலேயே மிகப்பெரியதாக உருவாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தைத் திறந்துவைத்து அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்னா நாளேட்டில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:
கரோனா வைரஸ் குஜராத் மாநிலத்தில் தீவிரமாக பரவுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அழைத்துவந்து மிகப்பெரிய அளவில் மக்களை கூட்டத்தை அழைத்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் காரணம் என்று கூறுவதை மறுக்க முடியாது. அதிபர் ட்ரம்ப்புடன் வந்த சில அமெரிக்க அதிகாரிகள் மும்பை, டெல்லிக்கும் சென்று கரோனா வைரஸைப் பரப்பிவி்ட்டார்கள்
குஜராத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டார் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர், 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
கரோனா வைரஸை மகாராஷ்டிராவில் கட்டுப்படுத்த முடியாததால் உத்தவ்தாக்கரே அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர்ஆட்சியை கொண்டுவர முயற்சித்தால் அது தற்கொலைக்கு சமமானமுடிவாகும். எவ்வாறு குடியரசு தலைவர் ஆட்சி இங்கு வந்தது, அகற்றப்பட்டது என்பது 6 மாதங்களுக்கு முன்பு தெரியும்
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தவறியதால் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதாக இருந்தால் நாட்டில் 17 மாநிலங்களில் குடியரசுத் தலைவர்ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.
அதில் பாஜக ஆளும் மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும். மத்தியஅரசுக்கு கூட கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது, எந்த திட்டமிடலும் இல்லை.
மத்திய அரசு கொண்டுவந்த லாக்டவுன் தோல்வி அடைந்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அருமையான ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய அரசு எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது, இப்போதுகூட எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல், லாக்டவுனை தளர்த்தும் விஷயத்தை மாநிலங்களிடம் ஒப்படைத்துவிட்டது. இதுபோன்ற குழப்பம் இருக்கும் கரோனா சிக்கலை மேலும் மோசமாக்கும்
கரோனா வைரஸ் மாநிலத்தில் அதிகரித்து வருவதற்காக ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர சிலர்(பாஜக) கோருவது வியப்பாக இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மகாவிகாஸ் அகாதி அரசில் 3 கட்சிகளும் ஒருவிதமான கட்டுப்பாடுடன் இருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள இந்த மூன்று கட்சிகளுக்குள் முரண்பாடு இருந்தாலும் அரசுக்கு எந்த விதமான சி்க்கலும் இல்லை.
பாஜக, சிவேசனா கூட்டணி அரசில் முரண்பாடு இருந்தபோதிலும், பட்னாவிஸ் அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் கடைசிவரை வரவில்லை. சிவசேனா அமைச்சர்கள் சட்டைப்பாக்கெட்டில் ராஜினாமா கடிதத்தோடு பணிபுரிந்தபோதிலும் கூட பட்னாவிஸ்அரசுக்கு எந்தவிதமான சேதத்ததையும் ஏற்படுத்தவில்லை.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் புகழ்பெற்ற தலைவர். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் அவரால்தான் அரசின் எதிர்காலத்தை கணிக்க முடியும்.
மகாராஷ்டிரா அரசு நிலையாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும், காங்கிரஸ் கட்சி எங்கும் செல்லாது. கூட்டணிகட்சியில் உள்ளவர்கள் யாரும் குதிரைபேரத்துக்கு செல்லமாட்டார்கள்.
இவ்வாறு ராவத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT