Published : 26 May 2014 09:03 AM
Last Updated : 26 May 2014 09:03 AM

வீழ்ச்சியிலிருந்து காங்கிரஸை மீட்க வழி காணவேண்டும்: சோனியாவுக்கு கிஷோர் சந்திர தேவ் வலியுறுத்தல்

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து இப்போது நலிந்த நிலைக்கு வீழ்த்தி யுள்ளவர்களிடம் இருந்து காங் கிரஸை மீட்கும் வழியை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கண்ட றிய வேண்டும் என்று தெரிவித் திருக்கிறார் கட்சியின் மூத்த தலை வரான கிஷோர் சந்திர தேவ்.

இது தொடர்பாக பிடிஐக்கு அளித்த பேட்டியில் அவர் கூறிய தாவது: காங்கிரஸ் தோல்விக்கு முது கெலும்பில்லாத தலைவர்களே காரணம்.

ஜெய்பூரில் நடந்த கட்சிக் கூட்டத் தில் தான் கூறிய வாக்குறுதிகளில் பாதியையாவது ராகுல் காந்தி நிறைவேற்றி இருந்தால் இத்தகைய படுதோல்வி காங்கிரஸுக்கு ஏற் பட்டிருக்காது. கட்சி அமைப்பில் மாற்றம் கொண்டு வருவேன் என ஜெய்ப்பூரில் நடந்த கட்சி மாநாட்டில் ராகுல் காந்தி தெரிவித்தார். இதில் பாதி அளவுக்காவது நிறை வேற்றி இருந்தால் இத்தகைய நிலைமை உருவாகி இருக்காது. சுமார் 20 அல்லது 25 பேர் கட்சியை யும் கட்சியின் மேலிடத் தலை வர்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களது பிடியி லிருந்து கட்சியைத் தளர்த்த வேண்டிய பொறுப்பு ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் இருக்கிறது.

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, லஞ்ச ஊழல் புகார்கள் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீதான நம்பிக்கைக்கு நெருக்கடி ஏற்பட்டது. அரசு மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு அறிவார்ந்த பதில் கொடுக்க அரசும் காங்கிரஸும் தவறியது.

சீமாந்திரா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியானது அரசியல் ரீதியில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் ஜெகன் மோகனிடம் அடமானம் போனது. கட்சி மேலாண்மையில் ஏகப்பட்ட குளறுபடி ஏற்பட்டது. நாட்டின் அரசியல் நிலவரத்தை சரியாக எடைபோட்டுச் சொல்ல ஆளில்லாமல் போனது. பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தான் அனுப்பிய குறிப்புகளை கட்சி கண்டு கொள்ளவில்லை. மக்க ளின் மனநிலை பொதுவாக எதிர்மறையாகவே இருந்தது.ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை பின்னர் தம் பக்கம் ஈர்த்துக் கொள்ளலாம் என தவறாக கணித்தது. ஆனால் அது ஈடேறவில்லை.

தேர்தலுக்கு முன்பே சீமாந்தி ராவில் தோல்வி நிச்சயம் என காங்கிரஸ் ஒப்புக்கொண்டது போன்ற நிலைமை ஏற்பட்டதால் ஒப்புக்கு வேட்பாளர்கள் போட்டி யிட்டனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தரப்பிலிருந்தும் போதிய நிதி உதவி கிடைக்கவில்லை. கட்சித் தலைமைக்கு கட்சி நிர்வாக அமைப்புகளிடம் இருந்து கள நிலவரம் பற்றி சரியான கருத்துகள் தெரிவிக்கப்படவில்லை என்றார் தேவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x