Published : 20 Feb 2020 08:10 AM
Last Updated : 20 Feb 2020 08:10 AM
பிரிட்டனிலிருந்து வெளியாகும் ‘டைம்ஸ் ஹயர் எஜுகேஷன்‘ (டிஎச்இ) இதழ், இந்த ஆண்டுக்கான வளரும் பொருளாதார நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் 47 நாடுகளைச் சேர்ந்த 533 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 56 இந்தியாவைச் சேர்ந்தவை ஆகும். இந்தப் பட்டியலில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில், சீனா 30 கல்வி நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 11 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) 16-ம் இடத்தில் உள்ளது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் (ஐஐடி-கள்) அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
ஐஐடி காரக்பூர் 32-வது இடத்தையும், ஐஐடி டெல்லி 38-வது இடத்தையும் ஐஐடி சென்னை 63-வது இடத்தையும் பிடித்துள்ளன. அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், இந்தியன் ஐஐடி ரோபர் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி ஆகியவை முதல் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளன. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT