Published : 08 Feb 2020 02:58 PM
Last Updated : 08 Feb 2020 02:58 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் நிலவரப்படி 28.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை தெரிவிக்கிறது.
அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப்பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் தவிக்கும் பாஜகவும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகக் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்துள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி 28.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு மையங்களில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவறவிடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT