Published : 03 Feb 2020 09:29 AM
Last Updated : 03 Feb 2020 09:29 AM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 243 கோடீஸ்வரர்கள் போட்டி

புதுடெல்லி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 243 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் ரூ.292 கோடி சொத்துகளுடன் ஆம் ஆத்மி வேட்பாளர் தர்மபால் லக்ரா முதலிடத்தில் உள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 668 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தேசிய கட்சிகள் சார்பில் 210, பிராந்திய கட்சிகள் சார்பில் 90, சுயேச்சைகள் 148 பேர் போட்டியிடுகின்றனர்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்), டெல்லி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 133 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 32 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது. கட்சிவாரியாக ஆம் ஆத்மியில் 42, பாஜகவில் 18, காங்கிரஸில் 12 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

டெல்லி வேட்பாளர்களில் 243 பேர் கோடீஸ்வரர்கள். கட்சிவாரியாக காங்கிரஸ் 51, ஆம் ஆத்மி 47, பாஜக 13, பகுஜன் சமாஜ் 3, தேசியவாத காங்கிரஸ் 5 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். ஆம் ஆத்மியின் முந்த்கா தொகுதி வேட்பாளர் தர்மபால் லக்ராவுக்கு ரூ.292 கோடிசொத்துகள் உள்ளன. கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்து ஆர்.கே.புரம் வேட்பாளர் பர்மிளா டோகாஸ், பாதர்பூர் வேட்பாளர் ராம் சிங் நேதாஜிக்கு தலா ரூ.80 கோடி சொத்துகள் உள்ளன. இருவரும் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள்.

மொத்த வேட்பாளர்களில் 340 பேர் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 298 பேர் பட்டப்படிப்பு, அதற்கு மேல் படித்துள்ளனர். 12 வேட்பாளர்கள் பட்டயப்படிப்பை முடித்துள்ளனர். 16 பேர் எழுத, படிக்க தெரியாதவர்கள். ஆம் ஆத்மியின் முந்த்கா தொகுதி வேட்பாளர் தர்மபால் லக்ராவுக்கு ரூ.292 கோடிசொத்துகள் உள்ளன. 
கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x