Last Updated : 01 Feb, 2020 06:39 PM

2  

Published : 01 Feb 2020 06:39 PM
Last Updated : 01 Feb 2020 06:39 PM

2020-21 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் விலை உயரும், குறையும் பொருட்கள் எவை?- முழுமையான பட்டியல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஏராளமான பொருட்களுக்கு சுங்க வரி விலக்கும், சுங்க வரியும் உயர்த்தப்பட்டிருப்பதால் அடுத்த நிதியாண்டில் இருந்து பொருட்களின் விலை உயரும்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் சுங்க வரி உயர்த்தப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்கள் பட்டியல்:

  • வெண்ணெய், நெய், சமையல் எண்ணெய், பீநட் பட்டர்.
  • பாலில் எடுக்கப்படும் பவுடர், கோதுமை, பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சோளம், சுகர் பீட் விதைகள்.
  • சூயிங் கம், சோயா பைபர், சோயா புரோட்டீன்.
  • வால்நட்.
  • காலணிகள், ஷேவர்ஸ், ஹேர் கிளிப், ஹேர் ரிமூவிங் பொருட்கள்.
  • பீங்கான் குவளை, கப், சமையல்பாத்திரங்கள், வாட்டர் பில்டர்ஸ், கண்ணாடிப் பொருட்கள்.
  • சீனக் களிமண் பொருட்கள், சமையல் சாதனங்கள்.
  • பட்டை தீட்டப்படாத ரூபி, எமரால்டு, சேப்பியர் ரகக் கற்கள்.
  • பூட்டுகள்.
  • கையில் ஜலிக்கும் சல்லடைகள்.
  • சீப்புகள், ஹேர்பின், கர்லிங் பின், கர்லிங் கிரிப், ஹேர் கர்லர்ஸ்.
  • டேபிள் ஃபேன், சீலிங் ஃபேன், பெடஸ்டல் ஃபேன்.
  • போட்டபிள் ப்ளவர்ஸ்.
  • வாட்டர் ஹீட்டர், இம்மர்ஸன் ஹீட்டர்ஸ்.
  • ஹேர் டிரையர், ஹேண்ட் டிரையிங் பொருட்கள்.
  • புட் கிரைண்டர், ஓவன், குக்கர், தட்டுகள், கிரில்ஸ், ரோஸ்டர்ஸ்.
  • காபி, டீ மேக்கர்ஸ்.
  • கொசு, பூச்சிகளை ஒழிக்கும் கருவிகள்.
  • மரச்சாமான்கள், விளக்குகள், அலங்கார விளக்குகள்.
  • விளையாட்டு பொம்மைகள், செயற்கை பூக்கள், மணிகள், பரிசுப் பொருட்கள், சிலைகள்.
  • செல்போன்களுக்கான பிரின்ட் சர்கியூட் போர்ட் அசெம்பிளி, கைரேகை அறியும் கருவி
  • புகையிலை, ஹூக்கா, சிகரெட், ஜர்தா, மணமூட்டப்பட்ட புகையிலை, புகையில் தொடர்பான பொருட்கள் விலை உயரும்

இவற்றின் விலை ஏப்ரல் மாதம் முதல் விலை உயரும்.

விலை குறையும் பொருட்கள்:

  • குறிப்பிட்ட ரக குதிரைகள்
  • செய்தி்த்தாள் அச்சிடும் நியூஸ் பிரிண்ட்
  • விளையாட்டுப் பொருட்கள், சாதனங்கள்
  • மைக்ரோபோன்கள்
  • மின்சார வாகனங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x