Published : 01 Feb 2020 04:25 PM
Last Updated : 01 Feb 2020 04:25 PM
ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். அவரின் 2-வது பட்ஜெட் இதுவாகும். கடந்த ஆண்டைப் போலவே சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டுவந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
1. இந்திர தனுஷ் திட்டம் விரிவாக்கம். கூடுதலாக 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் அமைக்கப்படும்.
2. சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை. 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்.
3. தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கீடு.
4. புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சிறந்த கல்வியை வழங்கும் வகையில், நேரடி அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித் திட்டம் அறிமுகம்.
5. வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் 'இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்' திட்டம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.
6. மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்.
7. தொழில் முனைவோரே இந்தியாவின் பலம். வேலைவாய்ப்பை உருவாக்குவோர்களே. அவர்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க சிறப்புப் பிரிவு.
8. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்க முயற்சி.
9. துறைமுகங்களை மேம்படுத்த நடவடிக்கை, முக்கியத் துறைமுகம் ஒன்று நிறுவனமயமாக்கப்படும்.
10. உற்பத்தியை பெருக்க திட்டம். தேசிய தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி இயக்கம் உருவாக்கம்
11. தொழில்துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் 27 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
12. கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை. கட்டமைப்புத் துறைக்கு 100 லட்சம் கோடி ரூபாய் - 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
13. மின்சாரத் துறைக்கு புதிய உத்வேகம் அளிக்க திட்டம், புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை. 2023 ஆம் ஆண்டுக்குள் ப்ரீ-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம்.
14. டெல்லி-மும்பை இடையேயான அதிவிரைவுச் சாலை 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
15. ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், கூடுதலாக தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும், 27 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT