Published : 01 Feb 2020 03:47 PM
Last Updated : 01 Feb 2020 03:47 PM

மத்திய பட்ஜெட் 2020: 20 சிறப்பம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். அவரின் 2-வது பட்ஜெட் இதுவாகும். கடந்த ஆண்டைப் போலவே சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டுவந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

1. குழாய் வழியே சமையல் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம், கூடுதலாக 16 ஆயிரத்து 200 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் அமைக்கத் திட்டம்.

2. அனைத்து கிராமங்களுக்கும், ஃபைபர் நெட் வாயிலாக இணைய வசதி, ஒரு லட்சம் பஞ்சாயத்துகள்.

3. நாடு முழுவதும் புள்ளி விவரக் கட்டமைப்பு பூங்காக்கள்.

4. நாடு முழுவதும் உடான் திட்டத்தின்கீழ் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

5. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள், அதிக அளவு கரியமில வாயுவை வெளியேற்றினால் மூட நடவடிக்கை.

6. ஊட்டச்சத்து திட்டத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

7. சுத்தமான காற்று திட்டத்திற்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, சுற்றுச்சூழலை பாதுகாக்க சுத்தமான காற்று இயக்கம்.

8. தேசிய பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை.

9. பட்டியலினத்தவருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக 85 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, பழங்குடியினர் நலனுக்கு 53 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

10. ஊழலற்ற, தூய்மையான நிர்வாகமே அரசின் தாரக மந்திரம்.

11. சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு முன்னுரிமை, 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

12. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு.

13. முறையாக வரி செலுத்துவோர் அச்சுறுத்தப்பட மாட்டார்கள்.

14. கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள்.

15. ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை 2022 ஆம் ஆண்டு நடத்தத் திட்டம். இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

16. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

17. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டுக்காக 5,958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

18. வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் பத்திரமாக உள்ளது. முதலீட்டாளர்களின் காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.

19. வங்கித் துறையை உறுதிப்படுத்த பல்வேறு உத்வேக முயற்சிகள். முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு.

20. கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x