Published : 31 Jan 2020 08:23 AM
Last Updated : 31 Jan 2020 08:23 AM
காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என மேற்கு வங்கத்தின் ‘1 ரூபாய் மருத்துவர்’ தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, இந்த ஆண்டில் பத்ம விருது பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு கடந்த 25-ம் தேதி இரவு வெளியிட்டது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சுஷோவன் பானர்ஜிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிர்பும் மாவட்டம் போல்பூரைச் சேர்ந்த இவர் அப்பகுதிவாசிகளால் 1 ரூபாய் மருத்துவர் என அழைக்கப்படுகிறார். இவர் ஏழை மக்களுக்கு ரூ.1 கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருவதைப் பாராட்டும் வகையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் சுஷோவன் பானர்ஜி கூறும்போது, “நான் கடந்த 57 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறேன். எனக்கு பத்ம விருது கிடைத்ததற்கு அவர்கள்தான் காரணம். இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போல்பூர் தொகுதி எம்எல்ஏவாக (1984) இருந்திருக்கிறேன். ஆனால், பாஜக தலைமையிலான அரசு பத்ம விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. எனினும், இதற்காக மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT