Published : 04 Jan 2020 06:38 AM
Last Updated : 04 Jan 2020 06:38 AM

குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க 3 கோடி குடும்பங்களை சந்திக்க பாஜக திட்டம்

புதுடெல்லி

குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க நாடு முழுவதும் 3 கோடி குடும்பங்களை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்சாரம் நாளை தொடங்குகிறது.

கடந்த டிசம்பரில் நாடாளு மன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இதற்கு பதி லடி கொடுக்கும் வகையில் குடி யுரிமை சட்டத்தை ஆதரித்து மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற் படுத்த பாஜக தலைமை திட்ட மிட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலை வரும் மாநிலங்களவை எம்.பி.யு மான அனில் ஜெயின் டெல்லியில் நேற்று கூறியதாவது:

குடியுரிமை சட்டம் தொடர்பாக மக்களிடையே ஆதரவு திரட்ட ஜனவரி 5-ம் தேதி முதல் பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியிலும் செயல் தலைவர் ஜே.பி. நட்டா காஜியாபாத் திலும் பாதுகாப்புத் துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரிலும் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜெய்ப்பூரிலும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.

இதேபோல அந்தந்த பகுதி பாஜக தலைவர்கள் மக்களை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளிப்பார்கள். ஜனவரி 5-ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு தொடர்ந்து மக்கள் சந்திப்பு நடைபெறும். இவை தவிர சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக சார்பில் 88662 88662 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளிப்போர் இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.

குடியுரிமை சட்டம், தேசிய மக் கள்தொகை பதிவேடு, தேசிய குடி மக்கள் பதிவேடு குறித்து இந்திய முஸ்லிம்கள் அச்சப்பட தேவை யில்லை. இந்த சட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்தியா வின் ஒரே மதம் அரசமைப்பு சாசனம் மட்டுமே.

குடியுரிமை சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் மக்களிடையே வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. தாய் நாட்டுக்கு திரும்பி வரு வோருக்கு வேலை, வாழ்வா தாரத்தை வழங்க வேண்டும் என்று காந்தியடிகள்கூட அறிவுறுத் தியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x