Published : 31 Dec 2019 09:29 AM
Last Updated : 31 Dec 2019 09:29 AM
பெங்களூரு: கர்நாடகத் தமிழர்களின் நலனுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கு.புகழேந்தி மாரடைப்பால் நேற்று காலமானார்.
இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 10 நாட்களாக மதுரையில் தங்கி சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி புகழேந்தி காலமானார். இதையடுத்து அவரது ஊரான மேமாலூருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இன்று இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன. அவருக்கு மனைவி ரோஜாவதி, 3 மகள்கள் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேமாலூரை சேர்ந்த கு.புகழேந்தி 50 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவில் வேலை தேடி குடியேறினார். மைசூரு தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புகழேந்தி, 2013-ல் தமிழ்ச்சங்கத் தலைவரானார். புகழேந்தியின் மறைவுக்கு அனைத்திந்திய தமிழ்ச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.ராசன் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT