Published : 30 Dec 2019 07:46 PM
Last Updated : 30 Dec 2019 07:46 PM
370-ம் சட்டப்பிரிவு ரத்தான பிறகு காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அரசியல் தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் பணியை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதன் முதற்கட்டமாக காஷ்மீரின் 5 அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தேசிய மாநாடு, பிடிபி, காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தேசிய மாநாடுக் கட்சியின் இஷ்ஃபாக் ஜப்பார், குலாம் நபி பட், பிடிபி கட்சியின் பஷீர் மிர், ஜாகூர் மிர், மக்கள் மாநாடுக் கட்சியின் யாசிர் ரேஷி ஆகியோரை விடுவித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 5 உத்தரவுக்குப் பிறகு சுமார் 270 அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டனர். இந்தத் தலைவர்கள் முதலில் ஸ்ரீநகரில் உள்ள செண்டார் விடுதியில் வைக்கப்பட்டிருந்தனர், பிறகு இவர்கள் எம்.எல்.ஏ.ஹாஸ்டலுக்கு மாற்றப்பட்டனர்.
புத்தாண்டின் முதல் 15 நாட்களில் மேலும் சில தலைவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு கூறுகிறது, ஏனெனில் ‘இதுவரை காஷ்மீர் அமைதியாகவே உள்ளது’ என்றார்.
தேசிய மாநாடுக் கட்சியின் மூத்த தலைவர் அலி முகமது சாகர், பிடிபி கட்சியின் நயீம் அக்தர், மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சாஜத் லோனி, மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவர் ஷா ஃபேசல் ஆகியோர் உட்ப்ட 27 அரசியல் கைதிகள் பிரிவு 107-ன் படி தொடர்ந்து சிறையில்தான் இருப்பார்கள் என்று கூறினார் அதிகாரி ஒருவர்.
இருப்பினும் தேசிய மாநாடு தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லா, துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா, பிடிபி தலைவர் மெஹ்பூபா முப்தி ஆகியோர் தனித்தனி சப் ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT