Last Updated : 30 Dec, 2019 03:06 PM

 

Published : 30 Dec 2019 03:06 PM
Last Updated : 30 Dec 2019 03:06 PM

சோஷியல் மீடியாவில் பிரபலமாகும் ஆசை: ஓடும் ரயிலில்  அபாய சாகசம்- 20 வயது இளைஞர் பரிதாப பலி

பலியான தில்ஷத். இவரது நண்பர் எடுத்த வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட். தில்ஷத் ஃபுட்போர்டில் தொங்கிய படி..

மும்பை

சமூகவலைத்தளங்களில் கிடைக்கும் 10 நிமிட 15 நிமிட புகழுக்காக உயிரைத் துச்சமாக மதித்து வாழ்க்கையில் எந்த ரிஸ்க்கையும் எடுக்கும் போக்கு பலருக்கு அதிகரித்து வருகிறது. சாகசம் செய்வதாக நினைத்து கொண்டு சிலபல அபாய விளையாட்டுகளில் ஈடுபட்டு உயிரைவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதே ஆசை தூண்டிவிட மும்பையில் 20 வயது தில்ஷத் கான் என்ற இளைஞர் திவா-மும்ப்ரா இடையே ஓடும் ரயிலில் அபாயகரமாக சில சாகசங்களில் ஈடுபட்டு வந்தார், இவரது நண்பர் ஹுசைன் கான் நண்பனின் அசகாய அபாய சாகசத்தை வீடியோவாக ஷூட் செய்து கொண்டிருந்தார்.

ரயில் நிலையங்களில் நிற்கும் போது கீழே இறங்கி ரயில் வேகம் எடுக்க எடுக்க அதனுடனே ஓடி வருவது கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்குவது வாசற்படியில் நின்று கொண்டு இல்லாத சாகசங்களையும் செய்து காட்டுவது என்று பள்ளிச்சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலர் அபாயகர விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்ஷத் கான் இப்படித்தான் திவா-மும்ப்ரா இடையே வாசற்படியில் தொங்கியபடி ஆபத்தான விளையாட்டு சாகசத்தில் ஈடுபட்ட போது மின்கம்பத்தில் மோதி பலியாகியுள்ளார்.

இதையும் அவரது நண்பர் வீடியோ பிடித்துள்ளார். விபத்து குறித்து அதிர்ச்சியடைந்த ஹுசைன் கான் மும்ப்ராவில் உள்ள மருத்துவமனைக்கு நண்பன் தில்ஷத்தைக் கொண்டு சென்றார், ஆனால் அங்கு மருத்துவர்கள் தில்ஷத் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மூத்த ரயில்வே அதிகாரி கூறும்போது, தில்ஷத் கல்யாண் பகுதியில் வசிப்பவர் சிவாஜி முனையத்திற்குச் சென்று ஏதோ திருமணம் செல்வதற்காக உடைகள் வாங்க ரயிலில் பயணம் செய்த போதுதான் ஆபத்தான விளையாட்டில் பலியாகிவிட்டார், ரயில் வாசற்படியில் ஒட்டிலில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் அந்த இடத்திலிருந்து அப்படியே உடலைச் சாய்த்திருக்கிறார். மின்கம்பம் மோதி அவர் உயிர் பிரிந்தது, என்றார்.

சமீபத்தில்தான் தில்ஷத் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் சேர்ந்திருந்தார். இவருக்கு பெற்றோர் 2 சகோதரர்கள் 3 சகோதரிகள் இருக்கின்றனர்.

மும்பை ரயில்வேயின் சீனியர் டிவிஷினல் செக்யூரிட்டி கமிஷனர் அஷ்ரப் கூறும்போது, “ஓடும் ரயிலில் இது போன்ற ஆபத்தான் விளையாட்டில் ஈடுபடுவது தொற்று நோய் போல் பரவி வருகிறது. குறிப்பாக இது போன்ற உயிரைத் துச்சமாக மதிக்கும் ஆபத்தான விளையாட்டு குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டால் நிமிடங்களில் வைரலாகி வருகிறது. இது மற்றவர்களையும் இப்படிச் செய்ய தூண்டுகிறது. தற்போது இந்த வீடியோ மூலம் இது ஆபத்தான விளையாட்டு என்ற அச்சுறுத்தல் ஏற்படும், ஒரு பயம் வரும்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x