Published : 30 Dec 2019 07:48 AM
Last Updated : 30 Dec 2019 07:48 AM

24 நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட இந்திய கடற்படை முடிவு

புதுடெல்லி

புதிதாக 24 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இதில் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தி வசதி கொண்டதாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

நாடாளுமன்றக் குழுவிடம் இம்மாதம், இந்திய கடற்படை அதிகாரிகள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில் புதிதாக 24 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய கடற்படையிடம் ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் சக்ரா ஆகிய 2 நீர்மூழ்கி அணுசக்தி கப்பல்கள் உட்பட 17 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

இதில் பெரும்பாலான நீர்மூழ்கிக் கப்பல்கள் 25 ஆண்டுகள் பழமையானவை. அதில் 13 கப்பல்கள் 17 முதல் 32 ஆண்டுகள் பழமையானவை. எனவே 24 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் திட்டம் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை கொடுத்துள்ளோம். இதில் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தி வசதி கொண்டதாக இருக்கும்” என்றார்.

இந்திய கடல் எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக சீன கடற்படை கப்பல்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து நமது கடற்படையின் பலத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிதாக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x