Published : 28 Dec 2019 06:31 PM
Last Updated : 28 Dec 2019 06:31 PM
உத்தர பிரதேசத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டு 135-வது ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் உள்ள பிற எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுவதில்லை. வாய் மூடி மவுனமாக உள்ளன. ஆனால் காங்கிரஸ் அதை பற்றி கவலைப்படவில்லை.
மக்களுக்காக போராடுவதை முதன்மையான பணியாக கொண்டு காங்கிரஸ் செயல்படுகிறது. மற்றவர்கள் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை என நாங்கள் கவலைப்படவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடவும் தயாராகவே உள்ளோம்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT