Published : 28 Dec 2019 04:19 PM
Last Updated : 28 Dec 2019 04:19 PM
லக்னோவில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தியை நோக்கி காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டு 135-வது ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.
அப்போது திடீரென காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பிரியங்கா காந்தியை நோக்கி ஓடி வந்தார். இதனால் பற்றமடைந்த மற்ற நிர்வாகிகளும், பிரியங்காவின் பாதுகாவலர்களும் விரைந்து வந்து அந்த நபரை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் பிரியங்கா காந்தி தலையிட்டு தனது பாதுகாவலர்களை விலக்கினார். பின்னர் அந்த தொண்டரை அருகே அழைத்து அவர் கூறியவற்றை அமையாக கேட்டார்.
#WATCH Man breaches security of Priyanka Gandhi Vadra at a party event in Lucknow on Congress foundation day, gets to meet her. pic.twitter.com/v4UtwedMF2
— ANI UP (@ANINewsUP) December 28, 2019
பிரியங்காவிடம் சிறிது நேரம் பேசிய அந்த தொண்டர் பின்னர் அங்கிருந்து சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT