Published : 28 Dec 2019 09:24 AM
Last Updated : 28 Dec 2019 09:24 AM

குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பேரணி

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நேற்று பேரணி நடைபெற்றது. படங்கள்: ஏஎப்பி / பிடிஐ

மும்பை

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பிரம்மாண்ட பேரணிகள் நேற்று நடைபெற்றன.

இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு (முஸ்லிம் அல்லாதவர்) குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 1955-ம் ஆண்டின் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்தக் குடிரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயத்தில், இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்க்கட்சிகளை கண்டித்தும் ஒருசாரார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மும்பையில் பிரம்மாண்டம்

இந்நிலையில், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பிரம்மாண்ட பேரணிகள் நேற்று நடைபெற்றன. அதன்படி, தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் குடியரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் அச்சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் பங்கேற்றனர்.

டெல்லியை பொறுத்தவரை, பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி அங்குள்ள ஜமா மஸ்ஜித் மசூதிக்கு முன்பு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x