Published : 27 Dec 2019 06:18 PM
Last Updated : 27 Dec 2019 06:18 PM
இந்தியாவிலேயே அதிக அளவில் மக்கள் ஓலா வாடகை டாக்ஸிகள் மூலம் பயணங்களை மேற்கொண்ட நகரமாக புதுடெல்லி திகழ்கிறது. 2019ல் டெல்லியில் மட்டும் ஓலா பயணம் செய்த தூரம் 106 கோடி கி.மீ. தூரம்; 7.1 கோடிக்கும் அதிகமான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருநகரங்களில் சொந்த வாகனங்கள் வைத்திருக்கும் மக்கள் ஒருபக்கம் மும்முரமாக சாலைகளில் பறந்துசென்றாலும், இன்னொரு பக்கம் சொந்த வாகனங்கள் இல்லாதநிலையில் அப்படியே வைத்திருந்தாலும் அவசரத்திற்கு வாடகை டாக்ஸிகளை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகிவருகின்றன.
இன்று ஓலா கால் டாக்ஸி நிறுவனம் புதுடெல்லியில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
டெல்லி மாநகரம் ஒரே மாதிரியான தன்மை கொண்டதல்ல என்பதை இங்கு மக்கள் ஓலாவில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களை வைத்தே சொல்லலாம். அவ்வகையில் 2019ல் டெல்லியில் மட்டும் ஓலா பயணம் செய்த தூரம் 106 கோடி கி.மீ. தூரம்; ஓலா நிறுவனத்தில் மட்டும் டெல்லி வாடிக்கையாளர் மொத்தம் ஏழு கோடி பயணங்களை பதிவு செய்துள்ளனர்.
அதன் அடுத்த நிலையில்தான் மாணவர்களுக்கும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மைய நகரமாகத் திகழும் பெங்களூரு இடம்பெற்றுள்ளது. அதன் அடுத்த நலையில் மும்பை. இந்த இரு நகரங்களும் முறையே ஆறு மில்லியன் மற்றும் ஐந்து மில்லியன் சவாரிகளை பதிவு செய்துள்ளன.
தரவுகளின்படி, டெல்லி வாடிக்கையாளர்கள், 2019ல் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மொத்தம் 92.4 கோடி கிமீ (6.34 கோடி பயணங்கள்) மற்றும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை 14.1 கோடி கிமீ பயணத்தை மேற்கொண்டனர்.
டெல்லியை விட 9.9 கோடி பயணங்களுடன் பெங்களூரு அதிக எண்ணிக்கையிலான சவாரிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை, 5,84 கோடி பயணங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது.
மும்பை வாடிக்கையாளர்கள் 4.63 கோடி பயணங்களையும், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா முறையே 4.31 கோடி மற்றும் 2,07 கோடி சவாரிகளையும் ஓலாவில் பதிவு செய்து பயணங்கள் மேற்கொண்டனர்.
2019 ஆம் ஆண்டில் ஓலாநிறுவனத்தின் வாயிலாக மக்கள் பயணம் செய்த மொத்த தூரம் 60 லட்சம் கி.மீ. இதில், 16.6 கோடி கி.மீ பைக்குகள் மூலமாகவும், 120 கோடி கி.மீ.தூரம் ஓலா ஆட்டோக்களின் மூலமாகவும் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு ஓலா நிறுவனம் வெளியுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT