Published : 26 Dec 2019 07:01 AM
Last Updated : 26 Dec 2019 07:01 AM
கேரளாவை சேர்ந்த இளம்பெண் கையில் ஒரு பைசாகூட இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்.
கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் உமா ராய் (21). சாகச விரும்பியான இவர் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வீட்டை விட்டு புறப்பட்டார். புதுச்சேரி, தமிழகம், கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், அசாம் என்று ஊர் ஊராக சுற்றி தற்போது நாகாலாந்தில் அவர் முகாமிட்டுள்ளார்.
இதுகுறித்து உமா ராய் கூறியதாவது:
நான் சுற்றுலா செல்கிறேன் என்பது எனது பெற்றோருக்கு தெரியும். ஆனால் கையில் ஒரு பைசா கூட இல்லாமல் செல்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாது. நண்பர்களிடம் பணம் வாங்கி செல்கிறேன் என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
சிறு வயது முதலே வெளியூர்களுக்கு பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். பயணத்துக்கு பணமோ, பட்டப்படிப்போ தேவையில்லை என்பது எனது கருத்து. ரயில், லாரி, பஸ், ஆட்டோ, பைக், ஜேசிபி, டிராக்டர் என யாராவது ஒருவரின் உதவியுடன் தொடர்ந்து பயணம் செய்கிறேன். சில நாட்களில் நாளொன்றுக்கு 20 கி.மீ. நடந்தும் செல்கிறேன்.
பெண்கள் தனியாக செல்வது பாதுகாப்பு கிடையாது. அதுவும் முகம் தெரியாத நபர்களுடன் பணம் கொடுக்காமல் ஏதாவது ஒருவாகனத்தில் தொற்றிச் செல்வது மிகவும் அபாயகரமானது என்றுசிலர் அச்சுறுத்துவது உண்மைதான். நான் எதற்கும் பயப்படவில்லை. இரண்டு நாட்கள் தொடர்ந்து லாரியில் பயணம் செய்திருக்கிறேன். என்னை யாரும்தொந்தரவு செய்தது கிடையாது.
சில நேரங்களில் கசப்பானஅனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருநாள் இரவில் கேரளாவின் தொடுபுழாவில் சிலவீடுகளின் கதவை தட்டி இரவுதங்குவதற்கு இடம் கேட்டேன். அப்பகுதி மக்கள் என்னை தீவிரவாதியாக நினைத்து போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டனர். போலீஸார் விரைந்து வந்து என்னிடம் விசாரித்தனர். எனது சாகச பயணத்தை விளக்கிய பிறகு அவர்கள் தங்கள் ஜீப்பில் ஏற்றிச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
ஒடிசாவில் நானும் என்னைப் போன்று காசில்லாமல் ஊர் சுற்றும் ஒரு நண்பரும் இணைந்து பயணம் மேற்கொண்டோம். அப்போது ஒரு ஊரில், ஒரு நபர் உணவும், தங்க இடமும் அளித்தார்.அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, தங்க இடம் அளித்த நபர்என்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பது தெரிந்தது. அதிகாலை 3 மணிக்கு நானும் எனது நண்பரும்அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT