Published : 20 Dec 2019 07:29 AM
Last Updated : 20 Dec 2019 07:29 AM

டெல்லியில் போராட்டம் வலுக்கிறது: 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்; துப்பாக்கிச்சூட்டில் கர்நாடகாவில் 2 பேர், உ.பி.யில் ஒருவர் உயிரிழப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

லக்னோ / புதுடெல்லி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் வலுக்கிறது. அங்கு நேற்று 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப் பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர் கள் கைது செய்யப்பட்டனர்.

உத்தர பிரதேச தலைநகர் லக் னோவில் நேற்று காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கு போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேச தலைநகர் லக்னோ உட்பட அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப் போது பழைய லக்னோ பகுதியில் ஒரு காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டு களை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அதன்பிறகும் போராட்டம் நீடித்ததால் போலீ ஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமார் லாலு உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். அங்கு 144 தடை உத் தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி னர். அங்கும் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. வன் முறை ஏற்பட்ட லக்னோ, சம்பல் பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் 2 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவின் மங்களூரு நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீஸார் மீது சிலர் கற்களை வீசி தாக்கு தல் நடத்தினர். இதில் 20 போலீ ஸார் காயமடைந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத் தினர். துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந் திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் டெல் லியில் நேற்று பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்காரணமாக 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. சாலை போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது. டெல்லி விமான நிலை யத்தில் 19 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 16 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. போக்கு வரத்து நெரிசலால் விமானங்களை தவறவிட்டவர்களுக்கு முழு கட்டண தொகை திருப்பி அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா மற்றும் சில தனியார் விமான சேவை நிறுவ னங்கள் அறிவித்துள்ளன.

டெல்லி குருகிராமை சேர்ந்த ஒருவர் கூறும்போது, “போக்கு வரத்து நெரிசலால் ஓர் அங்குலம் கூட நகர முடியவில்லை. எனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு நடந்தே வீட்டுக்கு சென்றேன்” என்று தெரிவித்தார்.

டெல்லி போராட்டத்தில் பங் கேற்ற டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், அஜய் மாக்கன், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட் டனர். போராட்டம் வலுத்து வரு வதால் டெல்லியின் சில பகுதி களில் இணையசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் 1,200-க்கும் மேற்பட்டோர் இருந் தனர். அவர்களை போலீஸார் வலுக் கட்டாயமாக அப்புறப்படுத்தினர். சுமார் 13,000-க்கும் மேற்பட்ட பாது காப்புப் படை வீரர்கள் டெல்லி யில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

டெல்லி ஜாமியா மிலியா இஸ் லாமிய பல்கலைக்கழக மாணவர் கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது மாணவர்களை போலீஸார் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரப் பட்டது. இதனை தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஹரிசங்கர் அமர்வு ஏற்கவில்லை. இதுதொடர் பாக விரிவான விளக்கம் அளிக்கும் படி மத்திய அரசு, டெல்லி அரசு, டெல்லி போலீஸுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். அடுத்த விசாரணை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத் துக்கு எதிராக குஜராத்தின் அகமதா பாத் நகரில் நேற்று போராட் டம் நடைபெற்றது. போலீஸார் தடி யடி நடத்தி கூட்டத்தைக் கலைத் தனர். 20 பேர் கைது செய்யப் பட்டனர்.

பிஹாரில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில தலைநகர் மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. இதில் சிவசேனா பங்கேற்கவில்லை.

மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், கண்டன பேரணி நடைபெற்றது. தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாமில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து குவாஹாட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன், இணைய சேவை ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. இதனை விசாரித்த நீதிபதிகள் மனோஜித் பூயான், சவுமித்ரா சைகியா அமர்வு, உடனடியாக செல்போன், இணையசேவையை வழங்க உத்தரவிட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று எதிர்க்கட்சிகளின் தலைவர் களின் கூட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x