Published : 19 Dec 2019 09:49 AM
Last Updated : 19 Dec 2019 09:49 AM
உ.பி. நீதிமன்றத்தில் கொலை குற்றவாளி கொல்லப்பட்ட விவகாரத்தில் 18 போலீஸாரை அம்மாநில அரசு இடைக்கால பணிநீக்கம் செய்துள்ளது.
உ.பி.யின் பிஜ்னோர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கொலை வழக்கு ஒன்றை நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிமன்ற அறைக்குள் புகுந்த 3 பேர், குற்றவாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஷாநவாஸ் என்ற குற்றவாளி அதே இடத்தில் இறந்தார். 2 போலீஸார் காயம் அடைந்தனர். இந்த குழப்பத்தில் மற்றொரு குற்றவாளி அங்கிருந்து தப்பினார். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மூவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, நீதிமன்ற வளாக புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 17 போலீஸ் காவலர்கள் நேற்று இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT