Published : 17 Dec 2019 12:40 PM
Last Updated : 17 Dec 2019 12:40 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலானது இப்போதுதான் ஆனால் மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2018 மார்ச்சில் வெளியிட்ட அறிவிக்கை ஒன்றில் முஸ்லிம் பெயர் இல்லாமல் இருந்தது ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தற்போதைய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போலவே மார்ச் 26, 2018 அன்று ஆர்பிஐ அன்னியச் செலாவணி மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் (இந்தியாவில் நகராச் சொத்துக்கள் வாங்குவது மற்றும் சொத்து மாற்றம்) வெளியிட்ட அறிவிக்கையில், “ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து இந்தியாவில் தங்கியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிக்கள், கிறித்துவர்கள், மேலும் இவர்களில் நீண்டகால வீசா அளிக்கப்பட்டவர்கள் குடியிருப்புக்கான ஒரேயொரு நகரா சொத்தை தாங்களே தங்கி வாழ்வதற்காக இந்தியாவில் வாங்கலாம். மேலும் சுயவேலை வாய்ப்புக்காக ஒரேயொரு நகரா சொத்தை வாங்கலாம்”
இப்போது அமலாகியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அதே அயல்நாட்டு சிறுபான்மையினர்கள் முஸ்லிம்கள் நீங்கலாக இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. அதாவது அரசுடன் ஆலோசித்த பிறகே ஆர்பிஐ இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆனால் மத்திய ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குக் கூறிய போது, ஆர்பிஐ இந்த அறிவிக்கையை வெளியிடும்போது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் களத்திலேயே இல்லை என்றனர்.
குடியுரிமை என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது, எனவே இது குறித்து ஆர்பிஐ-யிடம் அரசு எதையும் ஆலோசிக்கவில்லை என்று கூறுகிறது ஆர்பிஐ வட்டாரங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT