Published : 16 Dec 2019 08:55 PM
Last Updated : 16 Dec 2019 08:55 PM
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று 4-ம் கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அதில் 62.54 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்3 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 4-ம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. தியோகர், பொகாரோ, தன்பாத், கிரிடி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராஜ் பாலிவார் மதிபூர் தொகுதியிலும் நிலம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் அமர்குமார் பவுரி சாணக்கியாரி தொகுதியிலும் போட்டியிட்டனர். 4-ம் கட்டத் தேர்தலில் மொத்தம் 221 பேர் களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நிறைவில் 62.54 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதையடுத்து ஐந்தாம் கட்ட மற்றும் இறுதிக்கட்டமாக 16 தொகுதிகளுக்கு டிசம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT