Published : 10 Dec 2019 05:21 PM
Last Updated : 10 Dec 2019 05:21 PM

பானிபட் திரைப்படத்துக்கு தடை: மக்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி

பானிபட் திரைப்படத்தை உடனடியாக தடை செய்து மறு தணிக்கை செய்ய வேண்டும் என மக்களவை எம்.பி.க்கள் இருவர் வலியுறுத்தியுள்ளனர்.

மூன்றாம் பானிபட் போரை வைத்து எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம் ‘பானிபட்.’ இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் கபூர். சஞ்சய் தத், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'லகான்', 'ஜோதா அக்பர்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய அசுதோஷ் கௌரிகர் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளானது.

கடந்த 1961-ம் ஆண்டு டெல்லியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பானிபட்டில் நடந்த போரை மையமாகக் கொண்டு ‘பானிபட்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பானிபட்டில் இதுவரை 3 போர்கள் நடந்துள்ளன. முதல் பானிபட் போரில் பாபரும், 2-வது பானிபட் போரில் அக்பரும் வெற்றி பெற்றனர்.

மூன்றாவது போர் மராட்டியர்களுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது ஷா அப்தாலிக்கும் இடையில் நடந்தது. அகமது ஷாவை ரோகில்லாக்கள், அவந்த் பகுதி நவாப் உள்ளிட்டோர் ஆதரித்தனர்.

ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் மராட்டிய மன்னர்களுக்கு ராஜபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போதைய பரத்பூர் மன்னர் மகாராஜா சுரஜ்மால் மராத்தியப் படையுடன் சென்று சரியான நேரத்தில் உதவாமல் பின் வாங்கிச் சென்றதாக 'பானிபட்' திரைப்படத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் திரைப்படம் ஜாட் சமூகத்தை அவமதித்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என மக்களவை எம்.பி.க்கள் இருவர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி எம்.பி. ஹனுமன் பெனிவால் கூறுகையில் ‘‘பானிபட் திரைப்படம் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மக்களின் மனதை புண்படுத்தி விட்டது. வரலாற்று உண்மைகள் திரித்து கூறப்பட்டுள்ளன. இந்த படத்தை மறுபடியும் தணிக்கை செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.

ராஜஸதானைச் சேர்ந்த பாஜக எம்.பி. சமீதானந்த் சரஸ்வதி கூறுகையில் ‘‘இந்த படத்தில் வரலாற்று தகவல்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x