Published : 06 Dec 2019 09:41 AM
Last Updated : 06 Dec 2019 09:41 AM
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி யின் எதிர்காலத்தை தீர்மானிக் கும் 15 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
கர்நாடகாவில் முந்தைய குமார சாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலை யில், கட்சித் தாவல் தடைச் சட்டத் தின் கீழ் 17 பேரையும் தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதற்கு எதிராக 17 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தகுதி நீக்கம் செல்லும். அதே வேளையில் 17 பேரும் இடைத் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை” என தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து இடைத்தேர்தல் நடைபெறும் சிவாஜிநகர், கே.ஆர்.புரம் உள்ளிட்ட 15 தொகுதி களில் 13-ல் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியது. பாஜகவும் காங்கிர ஸும் 15 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்தியுள்ளன. மஜத 12 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக வுக்கு 105 (ஒரு சுயேச்சை உறுப் பினரையும் சேர்த்து) உறுப்பினர் களின் ஆதரவு மட்டுமே உள்ளது. தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா ஆட்சியை தக்க வைப்பதற்கு 6 முதல் 8 இடங்கள் தேவைப்படுகின்றன. எனவே இந்த தேர்தலில் பெரும் பான்மையான இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா ஆட்சி அடுத்த 3 ஆண்டுகளுக்கும் நீடிக்கும் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
60 சதவீதத்தை கடந்தது
15 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று உற்சாகத்துடன் வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி கர்நாடகா முழுவதும் 15 தொகுதிகளிலும் 60 % வாக்குகள் பதிவாயின. இதில் அதிகபட்சமாக சிக்கப்பள்ளாப்பூரில் 79.8 %, குறைந்தபட்சமாக கே.ஆர்.புரத்தில் 37.5% வாக்குகள் பதிவாயின.
தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வேட் பாளர்களாக நிறுத்தப்பட்டதை கண்டித்து கே.ஆர்.புரம், ஹுன்சூர், ராணேபென்னூர், கே.ஆர்.பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவாஜிநகர், மகாலக்ஷ்மி லே அவுட் உள்ளிட்ட தொகுதிகளில் 500-க்கும் மேற்பட்டோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். விஜயநகர், ஹொச கோட்டை,அதானி, கோகாக் ஆகிய தொகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தகுதி நீக்க எம்எல்ஏக்களை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
நேற்று வாக்குப்பதிவு முடிந்த வுடன் மின்னணு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பு மிக்க இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 9-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT