Published : 05 Dec 2019 11:46 AM
Last Updated : 05 Dec 2019 11:46 AM
நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக ஏஆர்எக்ஸ் சர்வதேச கடல்சார் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைஜீரியா அருகே இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து கடல்சார் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் உலகளாவிய ஏஆர்எக்ஸ் நிறுவனம் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
டிசம்பர் 3 அன்று இரவு நேரத்தில் ஹாங்காங் கொடி பறந்துகொண்டிருந்த ஹாங்காங் நாட்டிற்கு சொந்தமான வி.எல்.சி.சி, நேவ் கன்ஸ்டெல்லேஷன் கப்பல் நைஜீரியா கடற்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென கடற்கொள்ளையர்கள் குறுக்கிட்டு ஹாங்காங் கப்பலைத் தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில் கப்பலை தங்கள்
வசம்கொண்டுவந்தனர்.ஹாங்காங் கப்பலை கடற்கொள்ளையர்கள் கையகப்படுத்திய இச்சம்பவத்தில் கப்பலில் இருந்த 19 பேரில் 18 பேர் இந்தியர்கள் என்றும் ஏஆர்எக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, நைஜீரியாவில் உள்ள அதிகாரிகளை அணுகி விவரங்களைக் கண்டறிந்து கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதற்கான உதவியை இந்திய தூதரகங்கள் துரிதப்படுத்தி வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT